Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Atlee : ராமின் ‘பறந்து போ’ – பாராட்டிய இயக்குநர் அட்லீ!

Atlee Praises Paranthu Po Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் அட்லீ. சமீபத்தில் இயக்குநர் ராமின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படம் வெளியானது. இப்படத்தைப் பாராட்டி அட்லீ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியல் வைரலாகி வருகிறது.

Atlee : ராமின் ‘பறந்து போ’ – பாராட்டிய இயக்குநர் அட்லீ!
இயக்குநர் அட்லீImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 06 Jul 2025 16:02 PM

இயக்குநர் ராம் (Ram ) இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பறந்து போ (Paranthu Po). இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா (Shiva) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் கிரேஸ் ஆண்டனி (Grace Antony)  மற்றும் அஞ்சலி (Anjali) இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமான ரயான் நடித்துள்ளார். இந்த படமானது அப்பா மற்றும் மகனுக்கு இடையே இருக்கும் பாசம் குறித்த கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இந்த படமானது கடந்த 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குநர் ராம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் தமிழ் சினிமாவில் வெளியான படமாக இந்த பறந்து போ படமானது அமைந்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பான் இந்தியப் பிரபல இயக்குநர் அட்லீயும் (Atlee)  பாராட்டும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநர் அட்லீ பறந்து போ படத்தைப் பாராட்டிய பதிவு :

இயக்குநர் அட்லீ பாராட்டு :

அந்த பதிவில் இயக்குனர் அட்லீ, “நான் ராம் சாரின் இந்த பறந்து போ திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் நினைவில் நிற்கும் திரைப்படமாக இப்படம் இருக்கிறது. ஒரு அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான அருமையான உறவு முறை இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் எனது நண்பர்தான். இப்படத்தில் நிறையப் பாடல்கள் உள்ளது, அது எல்லாமே இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் எனது நினைவில் நின்ற கதாபாத்திரம் என்னால் அது நடிகை அஞ்சலியுடைய கதாபாத்திரம்தான்.

மிர்சி சிவாவின் கதாபாத்திரமும், அஞ்சலியின்கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் இப்படத்தில் எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடிகை கிரேஸ் ஆண்டனி நடித்திருந்தார். மேலும் இந்த பறந்து போ திரைப்படமானது திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்தில் ஒன்றாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன்” என இயக்குநர் அட்லீ பாராட்டியுள்ளார்.

அட்லீயின் புதிய படம் :

இயக்குநர் அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாக்கவுள்ளது. இப்படத்தில் மூலமாக இயக்குநர் அட்லீ தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் பிரபல தீபிகா படுகோன் நடித்து வருகிறார். அந்த இந்தியப் படமாக உருவாகும் இப்படம் வரும் 2027ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.