Sara Arjun : ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் ‘தெய்வத்திருமகள்’ சாரா அர்ஜுன்.. வைரலாகும் வீடியோ!
Sara Arjun And Ranveer Singhs Dhurandhar Movie : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் சாரா அர்ஜுன். விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகத் துரந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில், வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாரா அர்ஜுன் (Sara Arjun). இவர் தமிழில் சைவம் (Saivam), தெய்வத்திருமகள் (Deiva Thirumagal) படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தில், இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யின் இயக்கத்தில் வெளியான படம் தெய்வத்திருமகள். இந்த படத்தில் சியான் விக்ரமின் மகள் வேடத்தில் சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரபலமான சாரா அர்ஜுன், சைவம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் (Aditya Dhar) இயக்கத்தில் உருவாகிவரும் துரந்தர் (Dhurandhar) என்ற திரைப்படத்தில், நடிகர் ரன்வீர் சிங்கிற்கு (Ranveer Singh) ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ரன்வீர்சிங்குடன் நெருக்கமான காட்சிகளில் சாரா அர்ஜுன் நடித்திருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாகத் தமிழில் நடித்துவந்த இவர், தற்போது இந்தியில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறாரா என தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட துரந்தர் பட அறிமுக வீடியோ பதிவு :
An Inferno will rise 🔥
Uncover the true story of The Unknown Men ⚔️#Dhurandhar on 5th December 2025.🔗 – https://t.co/WxOofB0WRF@duttsanjay #AkshayeKhanna @ActorMadhavan @rampalarjun #SaraArjun @AdityaDharFilms #JyotiDeshpande @LokeshDharB62 @jiostudios @B62Studios…
— Ranveer Singh (@RanveerOfficial) July 6, 2025
ரன்வீர் சிங் – சாரா அர்ஜுனின் துரந்தர் திரைப்படம்
இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிவருகிறார். இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் முன்னணி கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சாரா அர்ஜுன் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் டூத், அக்ஷ்ய் கண்ணா மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த துரந்தர் திரைப்படமானது வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் போதுதான், நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படமும் வெளியாகிறது. இந்நிலையில், நிச்சயம் இந்த இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.