Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sasikumar : ‘ஜெயில் கஷ்டங்களைச் சொல்லும் படம் ஃப்ரீடம் ‘ – சசிகுமார்!

Sasikumar Speech At Freedom Movie Audio launch : தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகர்களாக இருந்து வருபவர் சசிகுமார். இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் ப்ரீடம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய சசிகுமார். ப்ரீடம் படத்தின் கதைக்களம் பற்றிப் பேசியுள்ளார்.

Sasikumar : ‘ஜெயில் கஷ்டங்களைச் சொல்லும் படம் ஃப்ரீடம் ‘ – சசிகுமார்!
சசிகுமார்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 06 Jul 2025 17:34 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சத்யசிவா (Sathyasiva). இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ஃப்ரீடம் (Freedom). இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார்  (Sasikumar) நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose)  நடித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூலை 10ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சசிகுமார் இப்படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) திரைப்படத்திலும், இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அதை அடுத்ததாக இந்த ப்ரீடம் படத்திலும் அவ்வாறு நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றியிருந்தது. இதனை அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார். “ப்ரீடம் திரைப்படமானது ஜெயிலில் உள்ள கஷ்டங்களைச் சொல்லும் படமாக  இருக்கும்” என்று கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

ப்ரீடம் பட ட்ரெய்லர் பதிவு :

ஃப்ரீடம் பட இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேச்சு

சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸின் ஃப்ரீடம் பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய சசிகுமார் , “இந்த ப்ரீடம் இப்படமானது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாகும். இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் அருமையாகத் தனது பணியைச் செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் 4வது முறையாக இணைகிறேன். அவரின் இசை இப்படத்தில் சிறப்பாக உள்ளது. மேலும் நடிகை லிஜோமோல் ஜோஸ் வந்த பிறகுதான் இப்படம் வேறு மாதிரி இருந்தது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் ஆண்டனியுடனான அனுபவமும் மிகவும் நன்றாக இருந்தது. மேலும் இந்த ப்ரீடம் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி படத்தை போல காமெடியாக இருக்காது.

இப்படமானது முழுக்க ஜெயிலில் படும் கஷ்டங்கள் பற்றி சொல்லும் திரைப்படமாக இருக்கும். ரசிகர்களுக்கு அந்த கஷ்டத்தைத் தெளிவு படுத்தும் படமாக இருக்கும். மேலும் இப்படமானது கடந்த 1991ம் ஆண்டு நடந்த உண்மை கதை. இப்படத்தை தயாரித்ததற்கு, தயாரிப்பாளர் பாண்டியனுக்கு நன்றி. மேலும் இப்படத்தில் இயக்குநர் சத்யாசிவாவின் வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் இந்த ப்ரீடம் திரைப்படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்” என நடிகர் சசிகுமார் ஓபனாக பேசியுள்ளார்.

இந்த ப்ரீடம் திரைப்படமானது முழுக்க உண்மை சம்பவம் மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுடன் வரும் 2025, ஜூலை 10ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமாருக்கு இப்படமும் வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.