Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhruv Vikram : ‘கில்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்?

Dhruv Vikram New Movie Update : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர்தான் துருவ் விக்ரம். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில், இவர் தற்போது இந்தி திரைப்படமான கில் படத்தின், தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

Dhruv Vikram : ‘கில்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்?
துருவ் விக்ரம்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 06 Jul 2025 21:41 PM

சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன்தான் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தனது தந்தையைப் போல சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா (Adithya Varma)  என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இந்த திரைப்படமானது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின், தமிழ் ரீமேக் படமாகும். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். அதை அடுத்ததாக மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது மாரி செல்வராஜின் (Mari Selvaraj) இயக்கத்தில் பைசன் (Bison) என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் , இந்தி திரைப்படமான கில் (Kill) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த புதிய திரைப்படத்தினை பற்றிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

கில் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் :

இந்தி இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில். இந்த படத்தில் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தயாரித்திருந்தார். சுமார் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் சுமார் ரூ. 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இந்த திரைப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. மேலும் இப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பைசன் திரைப்படம் :

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் பைசன். இப்படமானது கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடித்துள்ளார். மேலும் உடன் நடிகர்கள் லால், பசுபதி, ரஜிஷா சஜயன், ஹரி கிருஷ்ணன், கலையரசன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. மேலும் இப்படமானது தீபாவளியை முன்னிட்டு வரும் 2025, அக்டோபர் 17ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.