Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : வெற்றிமாறன் – சிலம்பரசன் படத்தில் இணையும் கன்னட நடிகர்.. யார் தெரியுமா?

Vetrimaaran And Silambarasan Movie Update : நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இயக்குநர் வெற்றிமாறனுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசனுடன் கன்னட நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Silambarasan : வெற்றிமாறன் – சிலம்பரசன் படத்தில் இணையும் கன்னட நடிகர்.. யார் தெரியுமா?
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 06 Jul 2025 17:41 PM

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை 2 (Viduthalai 2). இப்படத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi)  மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது முழுக்க மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் சிலம்பரசனுடன் (Silambarasan) புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அறிமுக வீடியோ படப்பிடிப்பு கூட சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இந்த படத்தில் வெற்றிமாறனுடன் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் (Nelson Dilipkumar) முக்கிய பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய திரைப்படத்தை பற்றி இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

வாடிவாசல் படத்தை இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், சில காரணங்களுக்கு அப்படத்தை ஒத்திவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் உருவாக்கவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளாராம்.

அவர் வேறு யாருமில்லை, ஜெயிலர் படத்தில் நடித்திருந்த நடிகர் சிவ ராஜ்குமார் தான் (Shiva Rajkumar). இவர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணி :

இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிலம்பரசன் முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த புதிய திரைப்படத்தை வீ கிரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிலம்பரசனுடன் நடிகர் கே. மணிகண்டனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த புதிய திரைப்படமானது தனுஷின் வடசென்னை திரைப்படத்தின் பின்னணியில் உருவாகவிருக்கிறது.

லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்கள் ஒவ்வொன்றும் தொடர்புப் படுத்தி எடுக்கப்பட்டது போல, தனுஷின் வடசென்னை படத்தைத் தொடர்பு படுத்தி சிலம்பரசனின் புதிய படம் உருவாகவுள்ளதாம். இப்படத்திற்குப் படக்குழு “ராஜன் வகையறா” என டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதை அடுத்ததாக வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் இப்படம் ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.