Sasikumar : எனது படங்களைக் கல்லூரியில் ப்ரோமோஷன் செய்ய விரும்பவில்லை – சசிகுமார்!
Sasikumar About Film Promotion In Colleges : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சசிகுமார். இவரின் முன்னணி நடிப்பில் ப்ரீடம் திரைப்படமானது வரும் ஜூலை 10, 2025 அன்று வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய சசிகுமார், தனது படங்களைக் கல்லூரிகளில் விளம்பரப்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிகுமாரின் (Sasikumar) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் கடைசியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இப்படத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரனுடன் (Simran) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் சசிகுமார் இலங்கைத் தமிழராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இலங்கைத் தமிழராக சசிகுமார் நடித்திருக்கும் படம்தான் ப்ரீடம் (Freedom). இப்படத்தை இயக்குநர் சத்யசிவா (Sathyasiva) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில், கழுகு என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானார். இந்நிலையில், சசிகுமார் மற்றும் சத்யசிவா கூட்டணியில் ப்ரீடம் திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் ப்ரீடம் படக்குழுவுடன் சசிகுமாரும் இணைந்து கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய சசிகுமார், தான் எப்போதும் கல்லூரிகளில் படத்தை ப்ரோமோஷன் (Film promotion in colleges) செய்ய விரும்பமாட்டேன் எனப் பேசியுள்ளார். இதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




நடிகர் சசிகுமார் கல்லூரிகளில் ப்ரோமோஷன் செய்வது பற்றி பேச்சு :
ப்ரீடம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சசிகுமாரிடம் , செய்தியாளர் ஒருவர் உங்களின் படங்களை ஏன் கல்லூரிகளில் ப்ரோமோஷன் செய்வதில்லை எனக் கேள்விகள் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சசிகுமார், “எனக்கு கல்லூரிகளில் படங்களை ப்ரோமோஷன் செய்வது பிடிக்காது, அதில் விருப்பமும் இல்லை. என்னிடம் ஏற்கனவே ஒரு படத்திற்காகக் கல்லூரியில் ப்ரோமோஷன் செய்வதற்கு மாணவர்களை கூட்டமாகக் கூட்டிவந்து ப்ரோமோஷன் செய்யவேண்டும் எனச் சொன்னார்கள்.
ஆனால் நான்தான் வேண்டாம், அது ஒரு கல்வி நிலையம் அங்கே சென்று படங்களை ப்ரோமோஷன்செய்யவேண்டாம் என நான் எனது தனிப்பட்ட கருத்தைக் கூறியிருந்தேன். அதன் காரணமாகத்தான் நான் நந்தன் மற்றும் டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களில் கல்லூரிக்குச் சென்று ப்ரோமோஷனில் ஈடுபடவில்லை. அதைத் தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக, ப்ரீடம் படத் தயாரிப்பாளரும் என்னைக் கல்லூரியில் சென்று ப்ரோமோஷன் செய்யச் சொல்லவில்லை. நான் எப்போதும் அதை விரும்புவதில்லை, ஒருவேளை தயாரிப்பாளர்கள் நிச்சயமாகச் சொன்னால் அதைச் செய்துதான் ஆகவேண்டும்” என சசிகுமார் பேசியிருந்தார்.
சசிகுமார் பேசிய வீடியோ :
“I personally don’t want to promote my films in college institutions. They are in institutions to study, I don’t want to advertise there and misuse them👏”
– #Sasikumar at #Freedom Press meet pic.twitter.com/nGwM3KIJh2
— AmuthaBharathi (@CinemaWithAB) July 6, 2025
ப்ரீடம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இந்த படமானது இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் விஜய கணபதி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.