Idly Kadai :’இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!
Idly Kadai Movie Audio Release Rights : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் தனுஷ். இவரின் முன்னணி நடிப்பில் கோலிவுட் சினிமாவில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் இட்லி கடை. இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இது குறித்தான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படமானது தனுஷின் 52வது திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநராக தனுஷ் இயக்கியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இட்லி கடை படத்திலும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படமானது கிக் பாக்சிங் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படத்திலிருந்து புது அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. அது வேற எந்த நிறுவனமுமில்லை, சரிகமா (Saregama south) நிறுவனம்தான் பெற்றுள்ளது. இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இட்லி கடை படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :
🥁🔥
We’re happy to announce that the audio rights of #Idlykadai have been acquired by @saregamasouth 🕺🔊@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @MShenbagamoort3 @kavya_sriram@Kiran10koushik… pic.twitter.com/zH0pZovE0E
— DawnPictures (@DawnPicturesOff) July 7, 2025
இட்லி கடை படத்தின் கதைக்களம்
தனுஷின் 52வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த இட்லி கடை படத்தை, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் நடிகர்கள் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரக்கனி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கிராமம் மற்றும் கிக் பாக்ஷிங் என மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.
மேலும் படிக்க :தனுஷின் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
இப்படத்தில் தனுஷ் 2 வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமாக உருவாகியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இட்லி கடை படத்தின் ரிலீஸ் எப்போது :
தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் இப்படமானது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படமானது ஆரம்பத்தில் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகுவும் என படக்குழு அறிவித்திருந்தது.
மேலும் படிக்க :தனுஷின் இட்லி கடை படத்துடன் மோதும் காந்தாரா 2.. பாக்ஸ் ஆபிஸ் யாருக்கு வெற்றி?
பின் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடையாமல் இருந்த நிலையில், படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றியது. அதன்படி இந்த படம் வரும் 2025, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.