Thalaivan Thalaivii : தலைவன் தலைவி படப் ‘பொட்டல முட்டையே’ பாடல் BTS வீடியோ
Thalaivan Thalaivii Movie Pottala Muttaye Song BTS Video : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரென்டிங் பாடலாகப் பொட்டல முட்டையே என்ற பாடல் இருந்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலின் BTS வீடியோவை, இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் பாண்டிராஜ் (Pandiraaj). கிராமத்துக் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் என்றாலே நமது நினைவிற்கு வரும் முதல் இயக்குநரும் இவர்தான். பசங்க (Pasanga) முதல் கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam) வரை பல படங்களை இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் (Etharkum thuninthavan). நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் இப்படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தை அடுத்து இவர் இயக்கியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்துள்ளார். இருவரும் இப்படத்தின் மூலமாகத்தான் முதன்முதலில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியில் நிறைவடைந்தது.
அதன் பிறகு இப்படத்தின் டைட்டிலை படக்குழுவும் வெளியிட்டிருந்தது. இப்படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் (Santosh Narayanan) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. “பொட்டல முட்டையே” (pottala muttaye) என்ற இப்பாடலானது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இணையத்தில் ட்ரெண்டிங் பாடல்களில் ஒன்றாக இருக்கும் இப்பாடலின் BTS வீடியோவை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்ட BTS வீடியோ பதிவு :
View this post on Instagram
விஜய் சேதுபதி – நித்யா மேனன் கூட்டணி :
விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் தலைவன் தலைவி. இந்த படமானது முற்றிலும் கிராமம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில் இதில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் பேரரசி என்ற ரோலில் நடித்துள்ளார்.
முற்றிலும் கிராமத்துக் காதல் மற்றும் ஆக்ஷ்ன் நிறைந்த படமாக இப்படம் உருவாகியிருக்கிறதாம். இந்த தலைவன் தலைவி படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் கடந்த 2025, ஜூன் மாதத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்தது.
இந்த பாடலானது தற்போது வரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங் பட்டியலில் இருந்து வருகிறது. விஜய் சேதுபதியின் இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.