Demonte Colony 3 : பூஜையுடன் துவங்கிய அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ படப்பிடிப்பு!
Demonte Colony 3 Shooting Pooja Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அருள்நிதி. இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் டிமாண்டி காலனி. இப்படத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலாணி 2 கடந்த 2024ம் ஆண்டு வெளியான நிலையில், அதை தொடர்ந்து தற்போது டிமாண்டி காலனி 3 படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

நடிகர் அருள்நிதியின் (Arulnithi) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலனி (Demonte colony). இந்த திரைப்படத்தை ஆர். அஜய் ஞானமுத்து (R. Ajay Gnanamuthu) இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ரமேஷ் திலக் மற்றும் சனந்த் இணைந்து நடித்திருந்தனர். விறுவிறுப்பான கதைக்களத்துடன் , ஹாரர் படமாக இது வெளியாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த 2024ம் ஆண்டு டிமாண்டி காலாணி 2 படமானது வெளியானது. இந்த திரைப்படத்தையும் இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து இயக்க, அருள்நிதி முன்னணி நாயகனாக நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடத்தில் பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த படத்தின் தொடர்ச்சியாக தற்போது டிமாண்டி காலனி 3 (Demonte colony 3)படமும் உருவாகிவருகிறது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று 2025, ஜூலை 7ம் தேதியில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் (Shooting Pooja) தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




இணையத்தில் வைரலாகும் டிமாண்டி காலாணி 3 பட ஷூடிங் பூஜை புகைப்படம் :
Demonte Colony Part 3 Pooja Happened Today ✌🏼
𝐂𝐥𝐚𝐬𝐡 𝐎𝐟 𝐆𝐡𝐨𝐬𝐭𝐬 #𝐃𝐞𝐦𝐨𝐧𝐭𝐞𝐂𝐨𝐥𝐨𝐧𝐲𝟑 𝐕𝐬 #𝐀𝐫𝐚𝐧𝐦𝐚𝐧𝐚𝐢𝟓 𝐕𝐬 #𝐊𝐚𝐧𝐜𝐡𝐚𝐧𝐚𝟒
Endha Pei Periya Pei nu Adiche Paathuruvom 😁✌🏼 pic.twitter.com/hyPzVfs99x
— Lets OTT World (@LetsOTTWorld) July 7, 2025
டிமாண்டி காலனி 3 திரைப்படம் :
இந்த டிமாண்டி காலனி 3 திரைப்படமானது, டிமாண்டி காலனி 2 படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகர்களாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிமாண்டி காலனி 3 பட பட்ஜெட் :
இந்த டிமாண்டி காலனி 3 திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளாராம். இந்த டிமாண்டி காலனி 3 திரைப்படமானது சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் பொருட் செலவில் உருவாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.