Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nagarjuna : கூலி பட எதிர்பார்ப்புகளுக்கு நடிகர்கள் மட்டும் காரணமில்லை.. நாகார்ஜுனா பேச்சு!

Nagarjuna Talk About Aamir Khan And Lokesh Kanagaraj : நடிகர் நாகராஜுனா தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழில் நடித்திருக்கும் படம்தான் கூலி. நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு, நடிகர்கள் மட்டுமே காரணமில்லை லோகேஷ் கனகராஜும் முக்கிய காரணம் என நாகார்ஜுனா பேசியுள்ளார்.

Nagarjuna : கூலி பட எதிர்பார்ப்புகளுக்கு நடிகர்கள் மட்டும் காரணமில்லை.. நாகார்ஜுனா பேச்சு!
நாகார்ஜுனா மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jul 2025 16:37 PM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் லியோ (Leo) படத்தைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie) . இந்த திரைப்படத்தில் அதிரடி கதாநாயகனாக ரஜினிகாந்த் (Rajinikanth)  நடித்துள்ளார். இப்படமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாகக் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் வேட்டையன் (Vettaiyan) பட ஷூட்டிங்கை அடுத்ததாக இப்படத்தில் இணைந்தார். இந்த கூலி படமானது பான் இந்திய திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள், அமீர்கான் (Aamir Khan) , நாகார்ஜுனா (Nagarjuna) , உபேந்திர ராவ், ஷோபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), சத்யராஜ் (sathyaraj) மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகை பேட்டி ஒன்றி பேசிய நடிகர் நாகார்ஜுனா, கூலி படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நடிகர்கள் மட்டும் காரணமில்லை , லோகேஷ் கனகராஜின் இயக்கமும் ஒரு காரணம் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் அமீர்கான் பற்றியும் பேசியது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அமீர்கான் பற்றி பேசிய நாகார்ஜுனா :

சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நாகார்ஜுனா கூலி படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு பற்றியும் அமீர்கானின் நடிப்பே பற்றியும் பேசியுள்ளார். அதில் நாகார்ஜுனா, “இந்த கூலி திரைப்படம்தான் 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு, இப்படத்தின் நடிகர்கள் மட்டும் காரணமில்லை. அதற்கு இயக்குநர் லோகேஷ் சாரும் ஒரு முக்கிய காரணம். மேலும் இந்த கூலி படத்தில் அமீர்கானுக்கு எனக்கு எந்த காட்சிகளும் இல்லை. ஆனால் அவர் நடிப்பைப் பார்த்தது நான் வியந்தேன்.

கூலி படத்தில் புதிய அமீர்கானை அனைவரும் பார்ப்பீர்கள். கூலியில் நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் ரஜினிகாந்த் சாருடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறேன், ஆனால் அமீர்கானுடன் எனக்கு ஒரு காட்சி கூட இல்லை” என நடிகர் நார்கார்ஜுனா ஓபனாக பேசியுள்ளார்.

கூலி அமீர்கானின் அறிமுக போஸ்டர் பதிவு  :

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சரியாக 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.