Aamir Khan : விஷ்ணு விஷாலின் மகளுக்குப் பெயர்சூட்டிய அமீர்கான்.. வைரலாகும் புகைப்படம்!
Aamir Khan Names Actor Vishnu Vishals Daughter : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் விஷ்ணு விஷால். இவருக்கும், பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவிற்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான், அந்த குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) சினிமாவில் கதநாகனாக அறிமுகமாவதற்கு முன், உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்தார். அதன் பின் சினிமாவில் நடிகராக நுழைந்த அவருக்கு, முதல் திரைப்படமாக அமைந்தது வெண்ணிலா கபடி குழு (Vennila Kabadi Kuzhu). கடந்த 2009ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். தனது நடிப்பில் வெளியான முதல் படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாகவே நடிக்கத் தொடங்கினார். பின் இவர் கடந்த 2010ம் ஆண்டு ரஜினி நடராஜ் (Rajini Natraj) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதிகள் சில மனக் கசப்பின் காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா (Jwala Gutta) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் லிவிங் டூகெதரில் இருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திருமண செய்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த தம்பதிகளுக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்நிலையில், அந்த பெண் குழந்தைக்கு பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான் (Aamir Khan) பெயர்சூட்டியுள்ளார். அந்த பெண் குழந்தைக்கு நடிகர் அமீர்கான், “மிரா” (Mira) எனப் பெயரை வைத்துள்ளார். இது குறித்தான எக்ஸ் பதிவை பேட்மிட்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜ்வாலா கட்டா வெளியிட்டுள்ளார்.




ஜ்வாலா கட்டா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Our ‘Mira’!
Couldn’t have asked for more!!
This journey would have been impossible without u Aamir!!
We love you ❤️
P.S
Thank you for the beautiful name!!!! pic.twitter.com/v6Y5cmrTO2— Gutta Jwala 💙 (@Guttajwala) July 6, 2025
தமிழ் சினிமாவில் அமீர்கான் :
நடிகர் அமீர்கானைப் பிரபல பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை உருவாக்கிவருகிறார். இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் கூலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், அமீர்கான் வில்லனாக நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில்,இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
விஷ்ணு விஷாலின் புதிய படம் :
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் லால் சலாம். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று இப்படமானது தோல்வியில் முடிந்தது எனக் கூறப்படுகிறது .
இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் இரண்டு வானாம், மோகன்தாஸ், ஆர்யன் எனப் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கும் ஓஹோ எந்த பேபி என்ற படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.