Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalapathy Vijay : இந்தியாவிலே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரா தளபதி விஜய்? எவ்வளவு தெரியுமா?

Thalapathy Vijay salary In Jana Nayagan : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவர் இந்தியா அளவில் பல லட்சக்கணக்கான ரசிகர்களைத் தனது வசம் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதைப் பற்றி உண்மையான தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay : இந்தியாவிலே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரா தளபதி விஜய்? எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜய்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 06 Jul 2025 21:35 PM

தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) உலகளவில் பல லட்ச ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu)  இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியான கோலிவுட் திரைப்படங்களிலே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக அமைந்திருந்தது. உலகளவில் சுமார் ரூ. 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அரசியலை இறங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன் பின் தனது இறுதி திரைப்படமாக ஜன நாயகன் (Jana Nayagan) படத்தை அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H.Vinoth) இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்திற்காகத் தளபதி விஜய் சுமார் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது விஜய் ஒரு படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பதைப் பற்றிய , தகவல் வெளியாகியிருக்கிறது.

தளபதி விஜய் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக சுமார் ரூ. 300 கோடிகளைச் சம்பளமாக பெற்றுள்ளாராம். இது பற்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்

பாலிவுட் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படும் நிலையில், அமீர்கான் மற்றும் ஷாருக்கான் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ 275 கோடிகளுக்கு மேல் வாங்குவதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ. 300 கோடிகளைச் சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அல்லு அர்ஜுன்தான் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் நிலையில், தளபதி விஜய்யின் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ. 300 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜன நாயகன் படம் தளபதி விஜய்யின் கடைசி படமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அதில் நடிப்பதற்குத்தான் விஜய் சுமார் ரூ. 300 கோடி வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் :

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் 69வது படம்தான் ஜன நாயகன். இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் நரேன் உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2026, ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது.