Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

Idly Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படம் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனதால் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.

தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2025 14:40 PM

கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி பின்பு பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் உள்ள பெரும்பாளான துறைகளில் தனது தடத்தை பதித்துவிட்டார் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் தற்போது இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இது நடிகர் தனுஷ் இயக்கும் 4-வது படம் ஆகும். முன்னதாக இவர் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களில் இரண்டு படங்கள் இவரவே இயக்கி நடித்தார். ஒரு படத்தில் மட்டும் நடிக்கவில்லை. இந்த நிலையில் இந்த இட்லி கடை படத்தில் அவரே இயக்கி நடித்து உள்ளார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் நடிகர் தனுஷின் புகைப்படங்கள் வெளியானதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

அது எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பிறகே தெரியவரும். முன்னதாக படத்தின் வெளியீடு கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு என்று படக்குழு தெரிவித்து இருந்தது. ஆனால் படத்திற்கு தேவையான சில முக்கியமான காட்சிகளை படமாக்க வேண்டும் என்பதால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Also read… Thalapathy Vijay : நீங்க இல்லனா.. விஜய்யை பற்றி பிக் பாஸ் ராஜு நெகிழ்ச்சி

இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது?

இட்லி கடை படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தின் சிங்கிள் வீடியோ, டீசர் வீடியோ என எது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படத்தின் ரிலீஸ் அக்டோபர் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு இருப்பதால் படத்தில் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டில் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read… Soubin Shahir : பணமோசடி புகாரில் ‘கூலி’ பட நடிகர் சௌபின் சாஹிர் கைது!

இட்லி கடை படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: