Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vishnu Vishal : முதல் மனைவியுடன் விவாகரத்துக்கு காரணம்.. மனம் திறந்து பேசிய விஷ்ணு விஷால்!

Vishnu Vishal Abou Ex-Wife Divorce : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில், இறுதியாக லால் சலாம் என்ற படம் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர், தனது முதல் மனைவியுடனான விவாகரத்து பற்றி விளக்கியுள்ளார்.

Vishnu Vishal : முதல் மனைவியுடன் விவாகரத்துக்கு காரணம்.. மனம் திறந்து பேசிய விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jul 2025 16:18 PM

நடிகர் விஷ்ணு விஷாலின் ( Vishnu Vishal) நடிப்பில் இறுதியாக வெளியான படம் லால் சலாம் (Lal Salaam) . இந்த படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் விஷ்ணு விஷால் முன்னணி கதாநாயகனாக நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது சகோதரனையும் ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் (Krishnakumar Ramkumar) இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரன் ருத்ரா (Rudra) என்பவரைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். இந்த ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan Baby) படமானது 2025, ஜூலை 11ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் பேசிய அவர், தனது முதல் மனைவியுடனான விவாகரத்து (Divorce) பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

முதல் மனைவியுடனான விவாகரத்து குறித்து விஷ்ணு விஷால் பேச்சு :

இதையும் படிங்க : விவாகரத்து தொடர்பான வதந்தி.. ஸ்டைலாக பதிலளித்த நயன்தாரா!

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷாலிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அவரின் முதல் மனைவி விவாகரத்து காரணம் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால், ” நானும், முதல் மனைவி ரஜினியும் சுமார் 4 ஆண்டுகள் காதலித்து, அதன் பின்னேர திருமணம் செய்துகொண்டோம்.

எனக்கும் அவருக்கும் திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்து. ஆனாலும், நானும் அவரும் கடைசிவரை ஒன்றாக இருக்கவேண்டும் என எண்ணி, அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு பின் அவர் பல வருடங்களாகப் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றுவந்தார்.

இதையும் படிங்க : சினிமா என்பது ஒரு கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் பேச்சு!

நான் அப்போது படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்திவந்தேன், அதன் காரணமாக எனக்கு அவரின் மீது அக்கறை இல்லை என அவர் எண்ணிவிட்டார். ஆரம்பத்தில் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் வந்தது. பின் விவாகரத்திற்கான முடிவையும் ரஜினிதான் எடுத்தார், நான் இல்லை” என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கமாகப் பேசியுள்ளார். இந்த தகவலானது மக்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.