PS Mithran : சர்தார் 2-வை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ். மித்ரன்?
Director PS Mithran Next Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பி.எஸ். மித்ரன். இவரின் இயக்கத்தில் சர்தார் 2 படமானது ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்தை அடுத்ததாகத் தெலுங்கு நடிகருடன் படத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த நடிகர் யார் என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் (P.S. Mithran) கடந்த 2018ம் ஆண்டு வெளியான இரும்புத் திரை (Irumbu Thirai) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப்படத்தில் விஷால் (Vishal) மற்றும் சமந்தா (Samantha) முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். ஆன்லைன் பண திருட்டு தொடர்பான கதைக்களத்துடன் வெளியாகியிருந்த இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகிய ஹீரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவருக்கும் மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்த படமாக அமைந்தது கார்த்தியின் (Karthi) சர்தார் (Sardar). கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் மித்ரன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2 (Sardar 2) திரைப்படமும் உருவாகிவருகிறது.
இப்படம் வரும் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் தெலுங்கு நடிகரின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை, நடிகர் நாக சைதன்யா (Naga Chaitanya) என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தேசிங்கு ராஜா 2 மக்களின் மனதை வென்றதா? – எக்ஸ் விமர்சனம் இதோ!




பி.எஸ். மித்ரன் மற்றும் நாக சைதன்யா கூட்டணி :
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இந்த சர்தார் 2 இயக்கிய நிலையில், இப்படத்தை அடுத்ததாக நடிகர் நாக சைதன்யா படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணி படத்தை ஏ.கே.என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், சர்தார் 2 படத்தின் ரிலீஸை அடுத்தது இயக்குநர் பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்குவார் எனவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கார்த்தி-கல்யாணி பிரியதர்ஷன் காம்போ.. மார்ஷல் பட அப்டேட் இதோ!
கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் :
கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த சர்தார் 2 படமானது உருவாகிவருகிறது. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள், எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகச் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இப்படமானது இசையமைப்பாளர் சாம் சி.எஸ்- ன் இசையமைப்பில், இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. இப்படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெகு விரைவில் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.