Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Desingu Raja 2: தேசிங்கு ராஜா 2 மக்களின் மனதை வென்றதா? – எக்ஸ் விமர்சனம் இதோ!

Desingu Raja 2 X Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விமல். இவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் தேசிங்கு ராஜா 2. இன்று 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகியிருக்கும், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Desingu Raja 2: தேசிங்கு ராஜா 2 மக்களின் மனதை வென்றதா? – எக்ஸ் விமர்சனம் இதோ!
தேசிங்கு ராஜா 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jul 2025 15:38 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எழில் (Ezhil) . இவரின் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் தேசிங்கு ராஜா (Desingu Raja ). இந்த படத்தில் விமல் (Vemal) முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி (Bindhu Madhavi) நடித்திருந்தார். இந்த படமானது முழுக்க காமெடி மற்றும் காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து. இப்படத்தின் தொடர்ச்சியாக தேசிங்கு ராஜா 2 (Desingu Raja 2) திரைப்படம் உருவாகியிருந்தது.சுமார் 12 வருடங்களுக்குப் பின் இந்த தொடர்ச்சி திரைப்படமானது உருவாகியிருக்கிறது. இந்த படத்தையும் இயக்குநர் எழில் தான் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விமல் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள், ஜனநாதன், பூஜிதா, ரவி மரியா, குக் வித் கோமாளி புகழ், ஹரிஷிதா மற்றும் சிங்கம் புலி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தயாரிப்பாளர் பி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இந்த படமானது இன்று 2025, ஜூலை 11ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். மக்கள் மத்தியில் இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெறுகிறதா அல்லது இல்லையா என்பதைப் பற்றி விவரமாகக் காணலாம்.

இதையும் படிங்க : கார்த்தி-கல்யாணி பிரியதர்ஷன் காம்போ.. மார்ஷல் பட அப்டேட் இதோ!

தேசிங்கு ராஜா 2 படம் எப்படி இருக்கிறது :

முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாமாக பாகம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விமல் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் எழிலின் இயக்கம் இப்படத்தில் கொஞ்சம் மோசமாக இருப்பதாகவும் மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் கதை எப்படி :

இந்த படத்தின் கதை இயக்கம் கொஞ்சம் மோசமாக இருப்பதுவும், நடிகர் விமலின் கதாபாத்திரம் இப்படத்தில் பெரிதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் புகழ், ரவி மரியா போன்ற நடிகர்களின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையமைப்பு மட்டும்தான் இப்படத்தில் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஃப்ரீடம் முதல் ஓஹோ எந்தன் பேபி வரை… இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் என்ன புதுவரவு? லிஸ்ட் இதோ

படத்தை திரையரங்குக்குச் சென்று பார்க்கலாமா :

நடிகர் விமலின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களம் முதல் பாகத்தை போல இருக்கும் என எதிர்பார்த்துப் போனால் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த படம் வித்தியாசமாக இருக்கிற நிலையில், குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கிறது. மேலும் நடிகர் விமலின் ரசிகர்கள் பார்க்கும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.