Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புது ஸ்ட்ரேட்டஜியை கையில் எடுக்கும் கூலி படக்குழு? சோகத்தில் ரசிகர்கள்

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிப் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் படம் குறித்த வதந்தி ஒன்று வெளியாகி ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது ஸ்ட்ரேட்டஜியை கையில் எடுக்கும் கூலி படக்குழு? சோகத்தில் ரசிகர்கள்
கூலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2025 21:29 PM

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் வேட்டையன். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் தற்போது கூலி படத்தில் நடித்துள்ளார். ஆம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முரட்டு வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது தலைவரின் மாஸ் மற்றும் சிறந்த குணத்தை நாம் திரையில் அதிகமாக பார்த்துவிட்டோம். ஆனால் அவரது வில்லனிசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இந்தப் படத்தில் தலைவரின் மாஸான வில்லனிசம் தான் அதிகமாக காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

கூலி படத்திலிருந்து நோ டீசர், நோ ட்ரெய்லர்?

இதன் மூலம் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது உறுதியானது. மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியை நீடிக்காத வகையில் புதிய வதந்தி ஒன்று சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. அதன்படி கூலி படம் வெளியாவதற்கு முன்பு டீஸர் அல்லது டிரெய்லர் வெளியாகாது என்று செய்தி வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த கூலி படத்திற்கு ஒரு புதிய மார்க்கெட்டிங் யுக்தியை படக்குழு பின்பற்ற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Also read… பேச்சுலர் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஷ்ணு விஷால்!

கூலி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also read… Director Ram : குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் என்பதும் வன்முறைதான்.. இயக்குநர் ராம்!

இந்த கூலி படத்தின் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்ஹ்டில் நடித்து உள்ளனர். மேலும் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது பாடலை வருகின்ற ஜூலை மாதம் 11-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமுட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.