ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு புகைப்பட உலகில் பல தடைகளை தாண்டி சாதனை படைத்துள்ளார் அசாமை சேர்ந்த கீதிகா தாலுக்தார். “விளையாட்டு புகைப்படம் பெண்களுக்கு ஏற்றதல்ல” என்ற விமர்சனங்களையும், பல அவமதிப்புகளையும் எதிர்கொண்ட அவர், தனது கனவை மட்டும் கைவிடவில்லை. ஒரு கட்டத்தில் கூட்டம் அவரது கேமராவை உடைத்ததுடன், மற்றொரு விபத்தில் மூன்று மாதங்கள் நடக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டார்.