AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிடும் ஏ.ஆர்.முருகதாஸ்?

Director AR Murugadoss New Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் எப்படி இருக்கும் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிடும் ஏ.ஆர்.முருகதாஸ்?
ஏ.ஆர்.முருகதாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2026 21:15 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் நடிகர் அஜித் குமாரின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்தப் படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றதன் காரணமாக தமிழ் சினிமவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மதராஸி. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிடும் ஏ.ஆர்.முருகதாஸ்?

‘சிக்கந்தர்’ மற்றும் ‘மதராசி’ படங்களுக்குப் பிறகு, வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகரை வைத்து வணிக ரீதியான அதிரடித் திரைப்படம் ஒன்றை இயக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கான திரைக்கதை முதலில் சிம்புவுக்காக (STR) உருவாக்கப்பட்டது; இருப்பினும், அவர் தற்போது பல படங்களின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மேலும், பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் ‘கொரில்லா’ தொடர்பான திரைப்படம் ஒன்றிலும் அவர் நடிக்கவுள்ளார்; இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிகளைப் பெறுவதற்கு அதிக காலம் தேவைப்படுவதால், இதற்கான முன் தயாரிப்புப் பணிகளும் நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும். எனவே, அந்தத் திரைப்படப் பணிகளையே அவர் முதலில் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… டியூட் 2 படமானது உருவாகுமா? – இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்.. ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பாலிவுட் நாயகன் – அட இவரா?

Follow Us