AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று மாலை வெளியாகிறது விஷாலின் மகுடம் பட டீசர்

Magudam Movie Teaser Out Today | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் வெளியாக உள்ள மகுடம் படத்தின் டீசரை இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வெளியாகிறது விஷாலின் மகுடம் பட டீசர்
மகுடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jun 2026 11:47 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக அளவில் நடித்து இருந்த காரணத்தால் அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து பல ஆக்‌ஷன் நாயகனாக நடித்து இருந்தார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் நடிப்பில் மகுடம் மற்றும் புருஷன் ஆகியப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

அதிலும் குறிப்பாக நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மகுடம் படத்தை அவரே இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அவர் அறிமுகம் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில் இன்று மாலை டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வெளியாகிறது விஷாலின் மகுடம் பட டீசர்:

அதன்படி விஷால் இயக்கி நடிக்கும் இந்த மகுடம் படத்தின் டீசர் நேற்று 10-ம் தேதி ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் இயக்குநர் பாரதிராஜா நேற்று மறைந்த காரணத்தால் படத்தின் டீசர் வெளியீட்டை இன்று ஒத்திவைத்தது படக்குழு. அதன்படி இன்று 11-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு மாலை 6 மணிக்கு மகுடம் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடைகிறது? வைரலாகும் தகவல்

மகுடம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜூலை மாதம் வெளியீட்டை திட்டமிடும் கௌதம் கார்த்திக்கின் ப்ளடி பாலிடிக்ஸ் படம்

Follow Us