விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடைகிறது? வைரலாகும் தகவல்
Suriya 47 Movie Shooting Update | மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டில் முதலாவதாக நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இயக்குநர் ஆர்,ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் வருகின்ற 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக உருவானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் சூர்யா 47 படம் தொடர்பான தகவல்களும் தொடர்ந்து வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.




சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடைகிறது?
அதன்படி மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஜித்து மாதவன் இந்த சூர்யா 47 படத்தை எழுதி இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. சூர்யாவின் ழகரம் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு இந்த ஜூன் மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
• Day 228! #Suriya47
Shoot will wrap by this month end!🕺🏻🔥 @Suriya_offl pic.twitter.com/73VYQjFfjF
— Abhimanyu (@Abhimanyu_Offl) June 9, 2026
Also Read… நூறு சாமியில் ஸ்வாசிகாவிற்கு பதிலாக அந்த நடிகையை நடிக்கவைக்கலாம் என நினைத்தேன் – இயக்குநர் சசி!