தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த மாதம் டி 55 படத்திலிருந்து வெளியாகும் முக்கிய அப்டேட்
Dhanush 55 Movie First Look and Title update | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது 55-வது படம் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தொடர்பான அப்டேட் இந்த ஜூன் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நாயகனாக அறிமுகம் ஆகும் போது ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவை பெருமைப்படுத்துவார் என்று கூறியிருந்தார் அவரே நம்பி இருக்க மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவரின் தோற்றத்திற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் பல நெகட்டிவான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து அத்தனை நெகட்டிவ்களையும் பாசிட்டிவாக மாற்றினார் நடிகர் தனுஷ். தற்போது ஹாலிவுட் வரை பிரபல நடிகராக வலம் வருகிறார். மேலும் இவரது நடிப்பில் இதுவரை 54 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக தமிழ் மொழியில் வெளியான படம் கர. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 55-வது படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.




இந்த மாதம் டி 55 படத்திலிருந்து வெளியாகும் முக்கிய அப்டேட்:
இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி தனுஷின் பிறந்தநாளன்று படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இந்த மாதமே வெளியாகவுள்ளது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஒரு சிறு முன்னோட்டக் காட்சி (glimpse) வெளியாகலாம் என்று தெரிகிறது. வலுவான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு ஸ்பை ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும் என்று கூறப்படுகிறது. திரையில் தனுஷின் ‘மாஸ்’ (mass) தன்மையை ராஜ்குமார் பெரியசாமி எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read… அட்லீயின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்? – வைரலாகும் செய்தி!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#D55 – Expected A Title and First Look on #Dhanush‘s Birthday But it’s coming this Month itself..🤩💥 Looks like Glimpse loading for D’s Birthday..⭐
Said to be a Spy Action Entertainer backed with Strong characters..🤝 Waiting to see how #RajkumarPeriyasamy is going to showcase… pic.twitter.com/DDIaYjuepq
— Laxmi Kanth (@iammoviebuff007) June 8, 2026
Also Read… ஜன நாயகன் ரிலீஸாகுதுனா நூறு சாமி ஒத்திவைக்க தயார் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்