ஜன நாயகன் ரிலீஸாகுதுனா நூறு சாமி ஒத்திவைக்க தயார் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்
Vijay Antony Talks About Jana Nayagan Movie | தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து தற்போது நாயகனாக கலக்கி வரும் விஜய் ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜன நாயகன் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு தனித்துவமான ஸ்டைல் உள்ளது. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் இசையிலும் ஒரு ஸ்டைல் உள்ளது. அவரது இசையில் வெளியாகும் பாடல்களில் புதிது புதிதான வார்த்தைகளை பயன்படுத்துவார். அது என்ன அர்த்தம் எந்த மொழி என்று தேடுவதற்கே ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் பெரும்பால பேட்டிகளில் எந்த அர்த்தமும் இல்லாமல் பலப் பாடல்களுக்கு வார்த்தைகளை பயன்படுத்தி இருந்ததாக விஜய் ஆண்டனி வெளிப்படையாக பேசியிருப்பார். இந்த பாடல்களை ரசிப்பதற்காகவே தமிழ் சினிமாவில் ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. மேலும் தற்போது வரை அந்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து இசையமைப்பாளரில் இருந்து நாயகன் அவதாரத்தை சினிமாவில் எடுத்தார் விஜய் ஆண்டனி. பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் நாயகனாக மட்டும் இன்றி தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜன நாயகன் ரிலீஸாகுதுனா நூறு சாமி ஒத்திவைக்க தயார்:
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் நூறுசாமி. இந்தப் படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜனநாயகன் படம் 2026 ஜூன் 19 வெளியாகும் எனத் தெரிந்தால் விசாரித்து பார்ப்பேன். உண்மை என்றால் கண்டிப்பாக என் படமான ‘நூறுசாமி’ திரைப்படத்தை தள்ளி வைத்து விடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் டிவி ரசிகர்களே அடுத்த சீரியலுக்கு தயாரா? – வைரலாகும் புரோமோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
ஜனநாயகன் படம் 2026 ஜூன் 19 வெளியாகும் எனத் தெரிந்தால் விசாரித்து பார்ப்பேன்.. உண்மை என்றால் கண்டிப்பாக என் படமான ‘நூறுசாமி’ திரைப்படத்தை தள்ளி வைத்து விடுவேன் ! 🫡
~ நடிகர்/இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி pic.twitter.com/K7f5ftaBBP
— Prakash Vijay (@PrakazVijay_Of) June 6, 2026