AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் டிவி ரசிகர்களே அடுத்த சீரியலுக்கு தயாரா? – வைரலாகும் புரோமோ!

Vijay TV New Serial: சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வரும் தொலைக்காட்சி சன் டிவி மற்றும் விஜய் டிவிதான். விஜய் டிவியில் சீரியல்களுக்கு பஞ்சமே இல்லை என்ற நிலையில், தற்போது புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாகவுள்ளதாக புரோமோ வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

விஜய் டிவி ரசிகர்களே அடுத்த சீரியலுக்கு தயாரா? – வைரலாகும் புரோமோ!
ஸ்டாலின் மற்றும் நிரோஷா புதிய தொடர்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Jun 2026 18:41 PM IST

விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) தினந்தோறும் பல சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகிறது. அதில் சீரியல்கள் மக்களின் மனதில் அதிக ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் (TRP Rating) முன்னிலையில் சின்ன மருமகள், அய்யனார் துணை (Ayyanar Thunai), சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Store) போன்ற சீரியல்கள் இருக்கிறது. இந்த சீரியல்கள் எப்போதும் விஜய் தொலைக்காட்சியில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல்களில் இடம்பெற்றுவருகிறது. அந்த வகையில் மேலும் விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்று வெளியாகவுள்ளதாம். இந்த சீரியல் குறித்த புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை போலவே, ஒரு உணவகத்தை நடத்தும் ஒரு குடும்பத்தை பற்றிய கதைக்களத்தில் சீரியல் தயாராகவுள்ளதாம். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த ஸ்டாலின் மற்றும் நிரோஷா ஆகிய இருவருமே மிக முக்கியமான வேடத்தில் நடித்துவருகின்றனர். தற்போது இந்த சீரியல் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க: நூறு சாமி படம் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்ட கதை – இயக்குநர் சசி பேச்சு!

ஸ்டாலின் மற்றும் நிரோஷாவின் புதிய சீரியல் குறித்து வெளியான ப்ரோமோ எக்ஸ் பதிவு:

இந்த புது சீரியலானது உணவகம் சார்ந்த கதையில் தயாராகிவருகிறது. இதில் ஸ்டாலின், நிரோஷா மற்றும் பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த சீரியலானது ஒரு உணவகத்தில் வேலைபார்க்கும் குடும்பத்தை பற்றிய சீரியலாக தயாராகிவருகிறது. இன்னும் இந்த சீரியலின் டைட்டில் மற்றும் எப்போதிலிருந்து, எந்த தீரத்தில் ஒளிபரப்பாகிறது என எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால் இணையத்தில் வைரலாகிவரும் தகவலின்படி இந்த சீரியலுக்கு லட்சுமி மெஸ் என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: STR51 படத்திற்கு பிறகே தலைவர்173 இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து.. தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

மேலும் இந்த சீரியல் வரும் 2026 ஜூன் மாற்றத்தின் இறுதியிலிருந்து ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் சீரியல் ஒன்று இந்த 2026 ஜூன் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த புதிய சீரியலை உருவாக்கிவருகின்றனர். தற்போது இந்த சீரியல் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் வரும் 2026 ஜூன் மாதத்தின் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us