AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல தொகுப்பாளர்.. அட இவர்தான்!

Famous Anchor Childhood photo : சமூக ஊடகங்களில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருவது வழக்கமே. அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் மூவரில் ஒருவர் பிரபலமான தொகுப்பாளர். அது யார் தெரியுமா?, அந்த சிறுமி யார் என விவரமாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல தொகுப்பாளர்.. அட இவர்தான்!
தொகுப்பாளரின் குழந்தைப் பருவப் புகைப்படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jun 2026 08:22 AM IST

சோஷியல் மீடியாக்களின் வளர்ச்சியை தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் விரல் நுனியில் கிடைக்கிறது. அந்த விதத்தில் இணையதளங்களில் பிரபல நடிகைகள், சின்னத்திரை (Small screen) பிரபலங்கள் போன்றவர்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. இந்நிலையில் மேலே உள்ள போட்டோவில் இருக்கும் மூவரில் ஒருவர் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி (Hostess). இவர் விஜய் டிவி (Vijay TV) முதல் சன் டிவி (Sun TV) போன்ற பிரபலமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்ட்டாக் பணியாற்றியுள்ளார். மேலும் சூர்யா (Suriya) முதல் தளபதி விஜய் (Thalapathi Vijay) வரை பல்வேறு நடிகர்களை பேட்டியும் எடுத்திருக்கிறார். இவர் சின்னத்திரை தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சினிமாவில் படங்களின் ஆடியோ லான்ச் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்துவருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் சில காரணங்களால் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார்.

தற்போது சிங்கிள் லேடியாக தனது கனவை நோக்கி பயணித்துக்கொண்டுவருபவர் இவர். இவரை பலரும் டிடி (DD) என அழைப்பதுண்டு. அட இவர் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி நீலகண்டன்தான் (Dhivyadharshini Neelakandan). இந்த மூவரில் நடுவில் இருக்கும் சிறுமிதான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

இதையும் படிங்க: அந்த நடிகருடன் நான் மூவி டேட் போவேன்.. மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

தொகுப்பாளினி டிடி வெறும் நிகழ்ச்சிகளை தொகுபவர் மட்டுமல்ல. தனது சிறுவயதிலே படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். மலையாளத்தில் 1990ம் ஆண்டில் வெளியான ஸுபாயாத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான விசில் என்ற படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தும் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவ்வப்போது படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்துவந்தார்.

இதையும் படிங்க: தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

மேலும் சியான் விக்ரமின் நடிப்பில் இன்னும் வெளியாகாமல் காத்திருக்கும் துருவ நட்சத்திரம் என்ற படத்திலும் திவ்யதர்ஷினி மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளர். இவரின் பிரபல சின்னத்திரை நிகழ்சயாக காஃபி வித் டிடி, அன்புடன் டிடி மற்றும் ஜோடி நம்பர் ஒன் போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் அந்த அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுப்பதில்லை. தற்போது திரைப்படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுவரையிலும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் ஈர்ப்பும் இருந்துவருகிறது.

Follow Us