AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

Producer Kalpathi S Archana Talks About CM Vijay | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருகிறார் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
அர்ச்சனா கல்பாத்தி - முதலமைச்சர் விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2026 18:39 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த நடிகர் தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகி உள்ளார். சினிமாவில் நடிகராக வந்த தன்னை மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து இந்த உச்சத்திற்கு கொண்டு வைத்துள்ளனர். தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது தமிழ் நாட்டு மக்கள் என்றும் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியளில் களம் இறங்கினார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கினார். தொடர்ந்து கட்சி பணிகள் ஒரு பக்கம் நடைப்பெற்றுக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தார். இறுதியாக ஜன நாயகன் படத்தை நடித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்.

தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கும் போதே இனி படங்களில் நடிக்கப்ப்போவது இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்ற 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று தற்போது முதலமைச்சராக உள்ளார். இவர் முதலமைச்சர் ஆனதை திரையுலகில் பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதுகுறித்து சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனது மிகவும் பெருமைப்படுகிறேன்:

தளபதி விஜய், முதல்வர் விஜய்யாக மாறியதைப் பார்த்தபோது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எந்தப் பின்னணியும் இல்லாமல், ஒன்றுமில்லாததிலிருந்து அவர் மேற்கொண்ட பயணம் என்னை அது ஊக்கமளிக்கிறது. சினிமாவில் அவரை நாங்கள் இழப்போம். கோட் படப்பிடிப்பின்போது, ​​படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரும் காரின் நம்பர் பிளேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் ஒரு திரைப்படத்தை ஒரு திரைப்படமாகவே பார்க்கிறேன்.

அந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று நான் விரும்பினேன், அதனால் எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல், நான் மிக நுணுக்கமாகக் கவனம் செலுத்தினேன். மேலும், இது ஒரு விஜய் சார் படம் என்பதால், ரசிகர்கள் விரும்பும் ஒரு திரைப்படத்தை வழங்குவது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. என்னுடையது உட்பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகம், மற்ற ரசிகர்களுக்கு அதைவிடவும் அதிகம்.

Also Read… சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் படம் ஒத்திவைக்கப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிக்மா படத்தின் முதல் சிங்கிளை இன்று வெளியிடுகிறார் துல்கர் சல்மான்

Follow Us