AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எல்கேஜி படத்தில் அந்த காட்சி உண்மையாக நடந்த சம்பவம் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

RJ Balaji talks about LKG movie | தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் எல்கேஜி படத்தில் வந்த காட்சி குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எல்கேஜி படத்தில் அந்த காட்சி உண்மையாக நடந்த சம்பவம் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
ஆர்.ஜே.பாலாஜிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2026 09:30 AM IST

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் கேமியோ வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் காமெடியனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை அடுத்தடுத்து பலப் படங்களில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி காமெடி வேடங்களில் நடித்து வந்தார். மேலும் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளிலும் நடித்து உள்ளார். தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடந்த 2019-ம் ஆண்டு வெளியான எல்கேஜி என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி எழுதி உள்ள நிலையில் இயக்குநர் கே.ஆர்.பிரபு இயக்கி இருந்தார்.

பொலிட்டிகள் சட்டையர் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் எல்கேஜி படத்தில் இருந்த காட்சி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாணது என்று தெரிவித்துள்ளார்.

எல்கேஜி படத்தில் அந்த காட்சி உண்மையாக நடந்த சம்பவம்:

சென்னை தி நகரில் உள்ள ஒரு கவுன்சிலர் தனியார் பள்ளியில் சீட் கேட்டு சென்ற போது சிஎம் சொன்னாலே தரமாட்டோம் உங்களுக்கு ஏன் கொடுக்கனும் என்று கூறியதால் அந்த பள்ளிக்கு கரெண்ட், தண்ணி, குப்பை என அனைத்தையும் கட் செய்ய சொல்லிருக்காரு. மொத்த ஸ்கூலும் நாற்றமாகி பேரண்ட்ஸ் எல்லாம் சண்டை போட்ட பிறகு அந்த பள்ளி நிர்வாகம் கவுன்சிலருக்கு 5 சீட் கொடுக்குறதா கொடுத்து இருக்கு. இது அவரு எனக்கு சொன்னத அப்படியே எடுத்து படித்தில் வச்சுட்டேன் அதுதான் ரிசர்ஜ் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Priyanka Mohan: கொரிய சுற்றுலாவின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா மோகன்! குவியும் வாழ்த்து!!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… பொதுவா பொம்பளைக்கு புருஷனா இருக்கதே கஷ்டம்… காமெடி – ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது கட்டா குஸ்தி 2 டீசர்

Follow Us