AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gatta Kusthi 2: ஆட்டம் ஆரம்பம்.. விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

Gatta Kusthi 2 Movie Teaser Update: நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்ல அய்யாவு கூட்டணியில் 2வது உருவாகியுள்ள திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இப்படமானது சிறப்பாக கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஜூலை 03ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த வகையில், அதற்கு முன் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Gatta Kusthi 2: ஆட்டம் ஆரம்பம்.. விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?
கட்டா குஸ்தி 2 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Jun 2026 18:28 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் நடிகராக பிரபலமானவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள பிரம்மாண்ட படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இதை இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேசஷ் தயாரித்துள்ளார். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி (Aishwarya Lekshmi) நடித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பாடல்களும் சிறப்பாகவே தயார்க்கியுள்ளது. இந்த திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 03ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆர்யாவின் அனந்தன் காடு படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் எப்போது வெளியாகும் :

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகியுள்ளதுதான் கட்டா குஸ்தி 2. இப்படமானது குஸ்தி மற்றும் கணவன் மனைவி இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. இப்படமானது காமடி, எமோஷனல் மற்றும் ஆக்ஷன் போன்ற காட்சிகளுடன் தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் 2026 ஜூன் 2ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் எந்த நேரத்தில் வெளியாகவும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிடும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கின்போது அது சவாலாக இருந்தது – கியாரா அத்வானி!

கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கட்டா குஸ்தி 2 படத்தில், பாகம் 1ல் நடித்த நடிகர்களை தொடர்ந்து, நடிகை ரம்யா கிருஷ்ணன், கருணாகரன், மொக்ஷ மற்றும் யோகி பாபு போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us