Kiara Advani: டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கின்போது அது சவாலாக இருந்தது – கியாரா அத்வானி!
Kiara Advani Reveals Toxic Movie Challenges: பான் இந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக கருதப்படுபவர் கியாரா அத்வானி. இவர் கன்னடத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள யாஷின் டாக்ஸிக் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது, அவர் சந்தித்த சவாலான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் கியாரா அத்வானி (Kiara Advani). இவர் இந்தி சினிமாவை கடந்து தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தெலுங்கில் கேம் சேஞ்சர் (Game Changer) என்ற படமானது வெளியாகியிருந்தது. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் வார் 2 என்ற படத்திலும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர்- உடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்துவந்த பிரம்மாண்ட மற்றும் பான் இந்திய திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இதில் நடிகர் யாஷ் (Yash) நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படம் கன்னட மொழியை மையமாக கொண்ட ஒரு பான் இந்திய படமாகும். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.
இதில் கியாரா அத்வானி, “நாடியா” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதில் பல நெருக்கமான காட்சிகளில் யாஷுடன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், டாக்ஸிக் பட ஷூட்டிங்கின்போது சவாலாக இருந்த விஷயங்கள் குறித்து தெரிவித்துள்ளார் .




இதையும் படிங்க: அந்த ஒரு சம்பவம் இனிஉருவ கேலி பண்ண கூடாதுனு முடிவு செய்தேன் – ஊர்வசி ஓபன் டாக்
டாக்ஸிக் ஷூட்டிங்கில் சவாலான விஷயங்கள் குறித்து பேசிய கியாரா அத்வானி:
நேர்காணலில் பேசிய கியாரா அத்வானி, “தென்னிந்திய சினிமாவும் பாலிவுட்டும் ஒன்றிலிருந்து ஒன்று பெரிதாக வேறுபடவில்லை. தென்னிந்திய சினிமாவில், மாலை 6 மணிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் நேரந்தவறாத படப்பிடிப்பு அட்டவணைகளைத் தான் குறிப்பாக ரசிக்கிறேன். அதைத் தவிர, இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது அனுபவங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: நண்பன் படத்தில் அந்த சின்ன வேடத்தில் நடிக்க இதுதான் காரணம் – பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஓபன் டாக்
மேலும் டாக்ஸிக் படத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால், அப்படடம் கொஞ்சம் சவாலாக இருந்தது. ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் முன்பு இரவு முழுவதும் வசனங்களைக் கற்றுக்கொண்டதால், பள்ளி நாட்களில் தான் மனப்பாடம் செய்ததெல்லாம் இப்போது பலனளித்தது” என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.
நடிகை கியாரா அத்வானியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
டாக்ஸிக் படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகவில்லை. இப்படம் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் என படக்குழு ஆரம்பத்தில் கூறிய நிலையில்; தற்போது தேதியை குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸை ஒத்திவைத்துள்ளது. அநேகமாக டாக்ஸிக் படமானது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.