அந்த ஒரு சம்பவம் இனிஉருவ கேலி பண்ண கூடாதுனு முடிவு செய்தேன் – ஊர்வசி ஓபன் டாக்
Actress Urvashi Recent Interview | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஊர்வசி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஊர்வசி. தொடர்ந்து மலையாள சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் கடந்த 1983-ம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் எழுதி இயக்கி நாயகனாக நடித்த மூன்று முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாக நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 1984-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் நாயகியாக அறிமுகம் ஆன படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மற்ற நாயகிகளுக்கு கூறப்படும் எந்த நடைமுறைகளும் இல்லாமல் மிகவும் கலகலப்பாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ஊர்வசி பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ஊர்வசியின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் ஜெயராம் இவருக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இந்தப் படம் வருகின்ற 5-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ள நிலையில் சமீபத்தில் ஊர்வசி அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




அந்த ஒரு சம்பவம் இனிஉருவ கேலி பண்ண கூடாதுனு முடிவு செய்தேன்:
அந்தப் பேட்டியில் ஊர்வசி பேசிய குமரிமுத்து அண்ணா கூட நடிக்கும் போது அந்தப் படத்தில் இயக்குநர் அவரை மாதிரியே கண்ணை வைத்துக்கொண்டு நடிக்க சொன்னார் நானும் நடித்தேன். அதன்பிறகு பல ஆண்டுகள் சென்று நான் குமரிமுத்து அண்ணாவை ஒரு பேட்டி எடுத்தேன். அப்போது அவர் அந்த கண்களால் தனக்கு ஏற்பட்ட மன சங்கடங்களை வெளிப்படையாக பேசினார். அதில் அவர் நான் நடித்தது குறித்து குறிப்பிட்ட போது நான் மிகவும் உடைந்து போனேன். அதன் பிறகு ஒரு நபரின் உடல் ஊனத்தை வைத்து கிண்டலடிக்க கூடாது என்று நான் முடிவு செய்தேன் என்று நடிகை ஊர்வசி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டியூட் பட இயக்குநரின் இயக்கத்தில் சிலம்பரசன்.. போட்டிபோடும் தயாரிப்பு நிறுவனங்கள்!
இணையத்தில் வைரலாகும் நடிகை ஊர்வசி பேச்சு:
View this post on Instagram
Also Read… Gatta Kusthi 2: கணவன் மனைவி ஃபைட்.. மேக்கிங் வீடியோவை பகிர்ந்த கட்டா குஸ்தி 2 படக்குழு!