40 வருடங்களை நிறைவு செய்தது கமல் ஹாசனின் விக்ரம் படம் – கொண்டாடும் படக்குழு
40 Years Of Vikram Movie | நடிகர் கமல் ஹாசன் ரா ஏஜெண்டாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 1986-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம். நடிகர் கமல் ஹாசன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். ஆக்ஷன் ஸ்பை பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கி இருந்தார். மேலும் எழுத்தாளர் சுஜாதா இந்தப் படத்திற்கு கதை எழுதி இருந்தார். படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ்,
லிஸ்ஸி, டிம்பிள் கபாடியா, அம்ஜத் கான், சாருஹாசன், ஜனகராஜ், மனோரமா, விக்ரம் தர்மா, வி.கே.ராமசாமி, டி.எஸ். ராகவேந்திரா, பிரதாபச்சந்திரன், ஆர்.எஸ். சிவாஜி, எல்.ராஜா, பானர்ஜி, அம்பிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் சந்திரஹாசன் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
40 வருடங்களை நிறைவு செய்தது கமல் ஹாசனின் விக்ரம் படம்:
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தாலும் இந்த விக்ரம் படத்திற்கு தனி மதிப்பு உள்ளது. மேலும் ரா ஏஜெண்டாக நடிகர் கமல் ஹாசன் நடித்த இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் வரும் கமலின் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாக விக்ரம் என்ற படத்தை மீண்டும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 40 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A legacy crafted by vision, remembered through generations
Celebrating #40yearsofVikram#KamalHaasan #RKFI #Vikram40@ikamalhaasan @ilaiyaraaja @Vairamuthu @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/jhQvrOZ95G
— Raaj Kamal Films International (@RKFI) May 29, 2026



