AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படத்தின் டெலீட்டட் சீன் – வைரலாகும் தகவல்

Deleted scenes from Suriyas Karuppu Movie Out Soon | நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து டெலீட்டன் காட்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

விரைவில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படத்தின் டெலீட்டட் சீன் – வைரலாகும் தகவல்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2026 12:58 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. தமிழ் மொழியில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தை போல இந்தப் படத்திலும் சாமியை மையமாக வைத்தே கதை எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் வெற்றியை மக்கள் மற்றும் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றன. தொடர்ந்து படக்குழு இந்தப் படத்தின் வெற்றி குறித்து பேசி வருகின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் வேலைகளை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. மாடர்ன் சாமி படமாக வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் நாட்டில் மட்டும் கடந்த 10 நாட்களில் ரூபாய் 130 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டி வெளியான படங்களில் இதுவரை 200 கோடிகளை உலக அளவில் தாண்டிய படமாக கருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படத்தின் டெலீட்டட் சீன்:

படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தொடர்ந்து படத்தின் பாடல் வீடியோ மற்றும் ஜூக் பாக்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட சுமார் 3.5 நிமிடக் காட்சிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக ஒரு பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… கார்த்தியின் பிறந்த நாள் ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட மார்ஷல் படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த காரணத்திற்காக தலைவன் தலைவி படத்தில் நடிக்க மிஷ்கினிடம் கேட்கவில்லை – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்

Follow Us