Kara OTT: ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த கர படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? எதில் பார்க்கலாம்!
Kara Netflix Release Date: தனுஷின் நடிப்பில் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர. இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அந்த வகையில் இது எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நாயகனாகவே நடித்துவருகிறார். இந்நிலையில், இவரின் நடிப்பில் திரையரங்குகளில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கர (Kara). இப்படத்தை போர் தொழில் (Por Thozhil) படத்தை இயக்கியிருந்த இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியிருந்தார். இதில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காம்போவில் முதல் முறையாக அமைந்த படம் என்ற நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது.
ஜி.வி. பிரகாஷ் இசையில் தயாராகியிருந்த இப்படம், கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரியரங்குகளில் வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது என்று கூறலாம். அந்த சமயத்தில் இப்படம் ஓடிடியில் எப்போது பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்கள் கசிந்துள்ளது.




இதையும் படிங்க: மலையாளத்தில் உருவான பாலன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
கர படத்தை எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம்:
இந்த கர படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், உலகளவில் இப்படம் சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்த நிலையில், இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு மே 28ம் தேதியில் வெளியிட தயாராகியுள்ளதாம்.
இதையும் படிங்க: ஒரு அரை மணிநேரத்தில் முடிவுபண்ண விஷயம்.. எதிர்பார்க்காத பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி – சூர்யா பேச்சு!
இதுகுறித்த நோட்டிபிகேஷன் பார் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காட்டப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் வைரலாகிவருகிறது. வரும் 2026 மே 28ம் தேதியில் இப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் அக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. திரையரங்குகளை தாண்டி ஓடிடியில் இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர திரைப்பட ஓடிடி ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
AS SAID, #Kara (2026) Streaming From MAY 28th On NETFLIX💥🔥🧨
CENSORED U/A — 16+
DURATED 2 HRS 38 MINS#Dhanush | #MamithaBaiju | #GVPrakash | #VigneshRaja 😎⭐🤞#KaraOnNetflix https://t.co/2pDOKGZvBP pic.twitter.com/aGxxA8mw0T— OTT STREAM UPDATES (@newottupdates) May 23, 2026
தனுஷின் கர படமானது ஆக்ஷன் திரில்லர் மற்றும் விறுவிறுப்பான கதையில் வெளியாகியிருந்தது. இதில் தனுஷ் ஒரு திருடனாகவே நடித்துள்ளார். இப்படத்தில் அவர் எவ்வாறு திருடனானார், என்ன காரணம் என மைய கருவாகி இப்படம் வெளியாகியிருந்தது. திரையரங்குகளை கடந்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 2026 மே 8ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.