போடடுடா தம்பி பிரேக்-அ.. கைபுள்ளையை ரீகிரியேட் செய்த மாகாபா – வைரலாகும் வீடியோ!
KPY Sarath and Makapa Anand: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருந்துவருபவர் மாகாபா ஆனந்த். இவர் சமீபத்தில் ஷூட்டிங்கின்போது, வின்னர் படத்தில் கைப்புள்ள வேடத்தில் வடிவேலு வண்டியில் வருவதுபோன்ற காட்சியை, ரீகிரியேட் செய்யும் விதத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளராகவும், படங்களில் நடிகராகவும் பிரபலமானவர் மாகாபா ஆனந்த் (Makapa Anand). இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். குறிப்பாக தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 7ன் (Cook with Comali Season 7) நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின்போது, இவர் வாட்டர்மெலான் திவாகரை (Watermelon Diwakar) தாக்கியதாகவும், குடிபோதையில் தவறாகவும் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து மாகாபா ஆனந்த் செய்தியாளர்களிடமும் பேசியிருந்தார். இந்த பிரச்சனையானது இத்துடன் முடிந்தது.
மேலும் மாகாபா ஆனந்த் தொகுப்பில் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 7 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி ஷூட்டிங் செட்டில், மாகாபா ஆனந்த் மற்றும் கேபிஒய் சரத் (KPY Sarath) இருவரும் செய்த காமெடியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ராம் சரணுடன் சிறப்பு பாடலில் நடனமாடும் ஸ்ருதிஹாசன்.. வெளியானது ஹெல்லல்லல்லோ பாடல் புரோமோ வெளியீடு!
மாகாபா ஆனந்த் குறித்து கேபிஒய் சரத் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வீடியோவில், மாகாபா ஆனந்த் ஒரு சிறிய தள்ளுவண்டியில் உள்ளே உட்காந்திருக்கிறார். அந்த வண்டியை பின்னாடி இருந்து, கேபிஒய் சரத் இருக்கிறார். இந்த வீடியோவில் பயத்தில் நிறுத்துடா என மாகாபா ஆனந்த் கத்தியவாறே உள்ளார். இந்த காட்சியை பார்க்கும்போது, பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில், வடிவேலு (கைப்புள்ள) ஒரு வண்டியில் தள்ளிக்கொண்டே போகும் காட்சியை நினைரூட்டுகிறது. தற்போது இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் படம் குறித்து இப்போது பேச முடியாது… ஆனால் – இயக்குநர் பேசில் ஜோசஃப் சொன்ன விசயம்
மாகாபா ஆனந்த் சின்னத்திரை மட்டும் இல்லாமல் சினிமாவிலும் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து கடலை, அட்டி, பஞ்சுமிட்டார் மற்றும் மீசையமுறுக்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் இவர், சிறு சிறு வேடங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரையிலிருந்து, சினிமாவில் நடிகராக படித்தவர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டாமல், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முழுமையான ஆர்வத்தை மாகாபா ஆனந்த் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.