கருப்பு படத்திலிருந்து வெளியானது அது தலோரே வீடியோ பாடல்!
Athu Thalore Video Song From Karuppu Movie | நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது கருப்பு படம். இந்தப் படத்தில் இருந்து தற்போது அது தலோரே என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கருப்பு. சூர்யாவின் 45-வது படமாக வெளியான இந்த கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி, அனகா மாயா, நட்டி நடராஜன், ஆடுகளம் நரேன், சுவாசிகா, தீபா, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியம், வேலா ராமமூர்த்தி, நமோ நாராயணா, லொள்ளு சபா மாறன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த கருப்பு படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கருப்பு படத்திலிருந்து வெளியானது அது தலோரே வீடியோ பாடல்:
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து அது தலோரே என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ஆதேஷ் கிருஷ்ணா எழுதி உள்ள நிலையில் அனன்யா சக்ரவர்த்தி பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலில் பலர் கோரஸ் செய்துள்ளனர். இந்தப் பாடல் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜான் – வைரலாகும் வீடியோ
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A melody that speaks straight to the soul.🤍#AthuThalore video song is OUT NOW!https://t.co/S5nn3HBDHG@actorsuriya ‘s #Karuppu
A @SaiAbhyankkar Musical 🎵
🎙#ananyachakraborty
Lyrics by @tatvaman@trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj… pic.twitter.com/GUcoyMLfLb
— Think Music (@thinkmusicindia) May 22, 2026
Also Read… Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லை.. அப்போ எப்போது தெரியுமா?