AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது த்ரிஷ்யம் 3 – மோகன்லால் நெகிழ்ச்சிப் பதிவு

50 days of Drishyam 3 movie | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான த்ரிஷ்யம் 3 படம் திரையரங்குகளில் தற்போது 50 நாட்களைக் கடந்துள்ளதை படக்குழு கொண்டாடி வருகின்றது.

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது த்ரிஷ்யம் 3 – மோகன்லால் நெகிழ்ச்சிப் பதிவு
த்ரிஷ்யம் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2026 18:17 PM IST

மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் நடிகர் மோகன்லால் நடிப்பில் குறைந்தது மூன்று அல்லது நான்கு படமாவது திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டிலும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இதுவரை இரண்டு படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அதில் முதலாவதாக நடிகர் மோகன்லால் நடிப்பில் பேட்ரியாட் படம் மற்றும் இரண்டாவதாக த்ரிஷ்யம் 3 என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது த்ரிஷ்யம் 3 படம்:

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான த்ரிஷ்யம் 3 படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது. படம் திரையரங்குகளில் மட்டும் இன்றி ஓடிடியிலும் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து உள்ள நிலையில் நடிகர் மோகன்லால் ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நடிகர் தனுஷின் ஓம் படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வைரலாகும் பதிவு

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!

Follow Us