AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Lokesh Kanagaraj and Allu Arjun Movie Shooting Update | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2026 08:30 AM IST

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளியான படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் கார்த்தி, கமல் ஹாசன், விஜய், ரஜினிகாந்த் என பலர் இவரது இயக்கத்தில் நடித்து உள்ளனர். கோலிவுட் சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வந்த இவர் தற்போது டோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளது குறிப்பிடக்கது.

அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் தனது  நாயகனாக அறிமுகம் ஆகும் டிசி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து அந்தப் படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜின் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான டெஸ்ட் ஷூட் பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நிறைவு செய்துவிட்டார். இப்படம் ஓராண்டுக்குள் முழுமையாகப் படமாக்கப்பட்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாக, ‘டெஸ்ட் ஷூட்’ காட்சிகளை உள்ளடக்கிய ‘மேக்கிங் வீடியோ’ (making video) வெளியாக வாய்ப்புள்ளது. அதேவேளையில், இப்படத்தின் தலைப்பை அறிவிக்கும் விளம்பர வீடியோவின் (title promo video) படப்பிடிப்பையும் படக்குழுவினர் விரைவில் தொடங்கவுள்ளனர் என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சில் மம்மி பாடல் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன? வைரலாகும் தகவல்

Follow Us