AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: வெங்கட் பிரபுவுடன் கூட்டணி..? புது பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

Dhanushs Next Big Film: தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபாலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் உருவாகிவரும் நிலையில், தற்போது இவர் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதில் அவர் வெங்கட் பிரபுவுடன் இணைவதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

Dhanush: வெங்கட் பிரபுவுடன் கூட்டணி..? புது பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!
தனுஷின் புது படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Jul 2026 20:20 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமா நாயகனாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவை கடந்து மற்றமொழி படங்களிலும் நாயகனாக நடித்து அசத்திவருகிறார். இவர் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் ஓம் (OM) என்ற படத்தில் நடிக்கிறார். இதை தனுஷ் தயாரிக்க, சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் நாயகியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தில் நடிகர் மம்முட்டியும் நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பின் தனுஷ் யாரின் இயக்கத்தில் நடிக்கிறார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், அது குறித்த அப்டேட்டை தனுஷ் வெளியிட்டிருக்கிறார். தனுஷின் புது படத்தின் அறிவிப்பு வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் வெளியாகுவதாக அறிவித்துள்ளார். இது தனுஷின் புது படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், அதன் இயக்குநர் யார் என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ரூ 100 கோடி வசூலை நெருங்கும் சமந்தாவின் மா இன்டி பங்காரம்.. படக்குழு வெளியிட்ட வசூல் விவரம்!

தனுஷின் புது திரைப்படம் குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தனுஷின் புது பட இயக்குநர் யார்:

சமீப காலமாக ரசிகர்கள் வட்டாரத்தில் தனுஷின் புது படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த கேள்விகள் இருந்தது. அந்த விதத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, தனுஷிடம் புது கதை ஒன்றை கூறியதாக சொல்லப்பட்டது. அந்த விதத்தில் இப்படமானது அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த விதத்தில் தற்போது தனுஷ் வெளியிட்ட போஸ்டரை, DxV என்பதுபோல குறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாய் கிழவி பட 100வது நாள் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

அப்போது அது DhanushxVenkat Prabhu- வாக இருக்கலாம் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. ஆனால் இது குறித்து வெங்கட் பிரபு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனுஷின் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் வெளியாகிறதாம். இணையத்தில் வைரலாகிவரும் தகவலின்படி, இதை வெங்கட் பிரபுதான் இயக்குகிறாராம். மேலும் இதற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. எது உண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம். இது உண்மையாக இருந்தால் தமிழ் சினிமாவில் மாஸான படமாக இது அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Follow Us