AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thaai Kizhavi: தாய் கிழவி பட 100வது நாள் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

Thaai Kizhavi 100th Days Celebration: நடிகை ராதிகா சரத்குமாரின் நடிப்பில் 2026ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் வெளியான திரைப்படம்தான் தாய் கிழவி. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க, சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்களை கடந்திருக்கும் நிலையில், படக்குழு அதை சிறப்பாக கொண்டாடியுள்ளது.

Thaai Kizhavi: தாய் கிழவி பட 100வது நாள் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
தாய் கிழவி 100 நாட்கள் கொண்டாட்டம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jul 2026 19:32 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், ராதிகா சரத்குமார் (Radhika sarathkumar) நடித்திருந்த திரைப்படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படத்தில் ராதிகா சரத்குமார் கிழவி வேடத்தில் நடித்திருந்த நிலையில், சிறப்பான நகைச்சுவை மற்றும் பெண்ணியம் சார்ந்த கதைக்களத்தில் படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராதிகா சரத்குமாருடன், ரேச்சல், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாலா சரவணன், சிங்கம்புலி மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி 07ம் தேதியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட இப்படமானது கிட்டத்தட்ட 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.

தாய் கிழவி படமானது வெளியாகி 100வது நாளை கடந்திருக்கும் நிலையில், இதை படக்குழு சிறப்பாக கொண்டாடியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தயாரிப்பாளராக அறிமுகமான ஜன நாயகன் பட இயக்குநர் எச்.வினோத்..!

தாய் கிழவி படம் 100வது நாளை கொண்டாடியது குறித்து படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ:

இந்த விழாவில், ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசன், ரேச்சல் உட்பட தாய் கிழவி படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், தாய் கிழவி படக்குழுவினருக்கு நினைவு பரிசை வழங்கி கௌரவித்துள்ளார். தற்போது இது தொடர்பான வேண்டிய இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஓடிடியில் தாய் கிழவி :

தாய் கிழவி படமானது திரையரங்குகள் வெற்றிக்கு பிறகு ஓடிடியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த் படமானது ஜியோ ஹாட் ஸ்டாரின் இருக்கும் நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போது டாப் 10 தமிழ் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா? வைரலாகும் தகவல்

தாய் கிழவி பட இயக்குநருடன் புது படத்தில் சிவகார்த்திகேயன்:

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துவரும் புது படம்தான் சேயோன். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் சிறப்பாக தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படமானது வரும் 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us