Thaai Kizhavi: மக்களின் பேராதரவு.. திரையரங்குகளில் 50வது நாளை கடந்த தாய் கிழவி!
Thaai Kizhavi 50th Day: ராதிகா சரத்குமாரின் நடிப்பில், 2026ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம்தான் தாய் கிழவி. இதை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தது. அந்த வகையில் இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி 50வது நாளை கடந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தயாரிப்பாளராகவும் சினிமாவில் பல படங்களை கொடுத்துவருகிறார். அந்த வகையில் இவரின் தயாரிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்த திரைப்படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) லீக் வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவருடன் சிங்கம்புலி, பாலா சரவணன், அருள்தாஸ், இளவரசு, முனிஷ்காந்த் மற்றும் ரேச்சல் ரெபேக்கா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026ம் பிப்ரவரி 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் மக்களின் ஆதரவை பெற்று கிட்டத்தட்ட ரூ 81 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.
திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட இந்த படமானது, வெளியாகி இன்றுடன் (17/04/2026) 50வது நாளை நிறைவு செய்துள்ளது. இதை படக்குழு கொண்டடைவருகிறது. இந்த படமானது ஓடிடியில் வெளியானாலும் சில திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள்.. படக்குழு உடனடியாக எடுத்த முடிவு!
தாய் கிழவி திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
What a brilliance ..😂#ThaaiKizhavi now streaming only on #JioHotstar #ThaaiKizhaviOnJioHotstar #ThaaiKizhaviNowStreaming #JioHotstarTamil @Siva_Kartikeyan @Sudhans2017 @KalaiArasu_ @SKProdOffl @PassionStudios_ @realradikaa @Dir_SivakumarM @nivaskprasanna @Bala_actor… pic.twitter.com/Y26PL0ZpdH
— JioHotstar Tamil (@JioHotstartam) April 17, 2026
இந்த தாய் கிழவி படமானது தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் என்ற ஓடிடியில் இப்படமானது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவருகிறது. இந்த படமானது திரையரங்கை கடந்து தற்போது ஓடிடியில் மக்கள் மத்தியில் வாரவேற்கப்படுகிறது. நடிப்பு, காமெடி மற்றும் படத்தின் கதைவாரியாக பாராட்டப்பட்டுவருகிறது. தாய் கிழவி படமானது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் படமாக இருக்கிறதாம். மேலும் இந்த 2026ம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, அதிகம் வசூல் செய்த பெண் லீட் கதாபாத்திரம் நடித்திருந்த படமாகும் இந்த தாய் கிழவி திரைப்படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமாயணா படத்தில் எனது ராவணன் கதாப்பத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகர் யாஷ்
இந்த படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன், தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளராக கமல்ஹாசன் தயாரிக்க உள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது