Manu Anand: அஜித் சார் எப்போதும் பிக் ஸ்டார் என்ற அந்தஸ்தை காட்டியதில்லை – இயக்குநர் மனு ஆனந்த் பேச்சு!
Manu Anand About Ajith kumar: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மனு ஆனந்த். இவர் தமிழில் தற்போது ஆர்யாவின் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகர் அஜித் குமாரின் நற்குணங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). இப்படத்தில் ஆர்யா (Arya) மற்றும் கௌதம் ராம் கார்த்திக் (Gautham Ram Karthik) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன் மற்றும் அதுல்யா ரவி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இயக்குநர் மனு ஆனந்தின் இயக்கத்தில் தமிழில் ஏற்கனவே எப்ஐஆர் (FIR) என்ற படம் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து தயாராகியுள்ள படம்தான் இந்த மிஸ்டர் எக்ஸ்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகியது. அந்த வகையில் சமீபத்தில் நேர்கணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மனு ஆனந்த், நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நற்குணம் மற்றும் அவரின் மனப்பான்மை பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: தலைவர் 173 படத்தில் தொடரும் இயக்குநர் பிரச்சனை? அடுத்த இயக்குநர் யார் தெரியுமா
அஜித் குமார் குறித்து சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்த இயக்குநர் மனு ஆனந்த்:
இயக்குநர் மனு ஆனந்த் அதில் பேசுகையில், ” அஜித் குமார் சார் என்னிடம் ஒருபோதும் எந்தவிதமான பிக் ஸ்டார் அந்தஸ்தையும் காட்டியதில்லை. நான் என்னை அறிந்தாள் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தபோது, அவர் என்னை மிகவும் சௌகரியமாக உணர வைத்தார். மேலும், என்னை அவரது வீட்டிற்கு அழைத்து, என்னிடம் இயல்பாகப் பேசினார். அவர் வழக்கமாக படத்தின் கதைகளைப் பற்றிக் கேட்பார். அடுத்த நாள் அல்லது வாரத்தில் என்ன ஷூட்டிங் நடக்கவிருக்கிறது என்று கேட்பார்.
இதையும் படிங்க: ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது காலனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஸ்கிரிப்ட் பேப்பர், படத்தின் பின்னணி மற்றும் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பற்றியும் கேட்பார். அஜித் சார் மிகவும் எளிமையான மனிதர். தனது நட்சத்திர அந்தஸ்துக்காக எதையும் செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு தெரியும். கௌதம் மேனன் சார் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றும் எங்களிடம் சொல்லுவார். படப்பிடிப்புத் தளத்தில் எங்களுக்கிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருந்ததில்லை” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் எக்ஸ் படம் குறித்து இயக்குநர் மனு ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
After years of waiting, I am glad that we get to present Mr X to you! I am grateful to my cast, crew and producers for trusting me with this film. Hope all of you will come to theatres to watch us on the 17th of April. Thank you #MrX pic.twitter.com/QIAkVTVJRu
— Manu Anand (@itsmanuanand) April 6, 2026
இந்த மிஸ்டர் எக்ஸ் படமானது வரும் 2027 ஏப்ரல் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.