AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

D56: தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி படத்தின் நடிகை இவரா?

D56 Movie Heroine: தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தற்போது டி55 தயாராகிவரும் நிலையில், இதையடுத்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் படத்தில் இணைகிறார். அந்த வகையில் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் பற்றி பார்க்கலாம்.

D56: தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி படத்தின் நடிகை இவரா?
டி56 திரைப்பட கதாநாயகிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Apr 2026 15:09 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பான் இந்திய நாயகனாக வலம்வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கர (Kara). இந்த படத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்த நடிக்க, இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதையில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2025 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Pariasamy) இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu ) இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள படம்தான் டி56 (D56). இந்த படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கவுள்ள நிலையில், எந்த நடிகை நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு!

தனுஷிற்கு ஜோடியாக டி56 படத்தில் நடிக்கும் நடிகை யார்:

லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் இப்படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது, யார் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தனுஷின் 56வது படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குவதை தனுஷ் உறுதி செய்திருந்தார். அந்த வகையில் இதில் உறியடி படத்தில் நடித்த நடிகர் விஜய்குமார் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தலைவர் 173 படத்தில் தொடரும் இயக்குநர் பிரச்சனை? அடுத்த இயக்குநர் யார் தெரியுமா

மேலும் லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவி வந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தில் காந்தாரா 2, மதராஸி போன்ற படங்களில் நடித்த நடிகை ருக்மிணி வசந்த் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ருக்மிணி வசந்தின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Rukmini Vasanth (@rukmini_vasanth)

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படத்தில் பிசியாக நடித்துவருகிறார். இதில் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா என இரு நடிகைகள் இணைந்து நடித்துவருகின்றனர். அந்த வகையில் இப்படமானது பான் இந்திய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us