Mamitha Baiju: ஆக்டிங் கிளாஸ் போனமாதிரி இருந்தது.. தனுஷுடன் கர படத்தில் நடித்தது குறித்த பகிர்ந்த மமிதா பைஜூ!
Mamitha Baiju Kara Movie Acting Experience: தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்ஷேஷனல் இளம் நடிகையாக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவர் தனுஷின் கர திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த மமிதா பைஜூ, கர படத்தில் தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தனுஷ் (Dhanush), சூர்யா (Suriya) போன்ற லீட் நடிகர்களுடன் திரைப்படங்களில், தனது நடிப்பை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் டியூட் (Dude). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தை அடுத்தாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் கர (Kara). இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ள நிலையில், அதிரடி ஆக்ஷன் திரில்லர் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இப்படம் வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை மமிதா பைஜூ, கர படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி.. முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் எது தெரியுமா?
தனுஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து மமிதா பைஜூ பகிர்ந்த விஷயம்:
அந்த நேர்காணலில் நடிகை மமிதா பைஜூ பேசுகையில், “நான் தனுஷ் சாரின் நடிப்பிற்கு மிகப்பெரும் ரசிகை. நான் அவரின் முந்தைய திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் அவரின் நடிப்பையும் மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். அதிலிருந்து நான் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. மேலும் கர திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவம், ஒரு ஆக்டிங் கிளாஸில் கலந்துகொண்டது போல இருந்தது” என அதில் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: சீமான் சாருக்கு இருக்குற அறிவு ரொம்ப அதிகம்.. அந்த விஷயத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் – பிரதீப் ரங்கநாதன் பேச்சு!
தனுஷ் மற்றும் மமிதா பைஜூவின் கர படத்தின் ஏன் கண்ணம்மா பாடல் குறித்த பதிவு:
10M+ Cumulative realtime views and counting for #KannammaEnKannamma ♥️
A @gvprakash musical 🥁
🎙️@dhanushkraja
🖋️ @dhanushkraja#KaraFromApril30Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl… pic.twitter.com/jSIAddQnq2— Vels Film International (@VelsFilmIntl) April 9, 2026
தனுஷின் கர திரைப்படமானது முற்றிலும் ஆக்ஷன் திரில்லர் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்திலும் நடிகை மமிதா பைஜூ “செல்லி” என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார்,, கருணாஸ் , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் புரமோஷன் மற்றும் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.