AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mamitha Baiju: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!

Mamitha Baiju About Viswanath And Sons: இளம் கதாநாயகியாக தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பிரபலமானவராக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவரின் நடிப்பில் கர படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இவர், சூர்யாவுடன் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Mamitha Baiju: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!
சூர்யா மற்றும் மமிதா பைஜுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Apr 2026 15:47 PM IST

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில், நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தில் தமிழ் நடிகர் சூர்யா (Suriya) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்த்தின் ஷூட்டிங் முடிந்து, இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. அதில் நடிகர் மாமிதா பைஜூ மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே வயது வித்தியாச காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டதாக தெரிகிறது. தன்னைவிடவும் 20 வயது அதிகமான நாயகனை காதலுக்கும் பெண்ணாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தய் அடுத்ததாக தனுஷிற்கு (Dhanush) ஜோடியாக கர (Kara) என்ற படத்திலும் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: AK 64 படத்தின் தயாரிப்பாளர் இவரா? அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து மமிதா பைஜூ பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய மமிதா பைஜூ, “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மைய கருவே, நகைச்சுவையுடன் கூடிய ஜாலியான கதைக்களம்தான். படம் முழுக்க முழுக்க ஜாலியாக இருக்கும் பாணியில் தயாராகியுள்ளது. பயங்கரமாக வந்திருக்கிறது. என்னை நம்புங்கள், இது அற்புதமாக இருக்கும். நான் மலையாளத்தில் ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தேன், பின்னர்தான் கதாநாயகியானேன். இவ்வாறு நான் படிப்படியாக முன்னேறி வருகிறேன். சரியான நேரத்தில் எனக்கானது நிச்சயமாக கிடைக்கும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் எனக்காக அந்த விசயத்தை செய்தார் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பேச்சு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகை மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தளபதி விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் இணைந்து நடித்துள்ள. அந்த விதத்தில் இவர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருக்கும் கர படம் வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகிறது. சூர்யாவுடன் நடித்துள்ள படம் 2026 ஜூலையில் மற்றும் தளபதி விஜய்யுடன் நடித்துள்ள படம் வரும் 2026ம் மே மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படங்களின் வெளியீட்டின் மூலம் மமிதா பைஜூவிற்கு மேலும் படவாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us