விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி.. முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் எது தெரியுமா?
Vijay TV TRP: தமிழ் மக்களிடையில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சி. அந்த வகையில் இந்த, விஜய் டிவியில் இந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம். அதுகுறித்த விவரங்கள் இதோ.
தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் வெறும் சீரியல்கள் மட்டுமில்லாமல், ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் வெளியிடப்பட்டுவருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் சன் டிவி (Sun Tv), விஜய் டிவி (Vijay TV) மற்றும் ஜீ தமிழ் என இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்கள்தான் பிரபலமான சின்னத்திரை தொலைக்காட்சிகளாக இருந்துவருகிறது. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி என இந்த இரு தொலைக்காட்சிகளுக்கு நடுவே டிஆர்பி (TRP) போட்டிகள் நிலவுவது வழக்கமே.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சீரியல்களுக்குள்ளும், டிஆர்பி போட்டிகள் நிலவிவருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 2வது வாரத்தில், விஜய் டிவியில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கை (Top 5 TRP Rating Serials) பெற்றுள்ள சீரியல்கள் எது என பார்க்கலாம். அந்த வகையில் முதலிடத்தில் உள்ள சீரியல் எது என்றும் பார்க்கலாம்.




இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!
இந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்கள் லிஸ்ட் :
இந்த வாரத்தில் விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில், அய்யனார் துணை சீரியல் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 உள்ளது. நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் மற்றும் 5வது இடத்தில அழகே அழகு என்ற சீரியலும் இடம்பிடித்துள்ளது. கடந்த வாரத்தில், சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த சீரியலை பீட் செய்து, அய்யனார் துணை சீரியல் முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்… பிரச்சனையை முடிக்க முன்வந்த சிலம்பரசன்
அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வார டிஆர்பி ரேட்டிங் புள்ளி விவரம் :
- அய்யனார் துணை சீரியல் – 6.73 டிஆர்பி
- சிறகடிக்க ஆசை சீரியல் – 6.70 டிஆர்பி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் – 5.89 டிஆர்பி
- மருமகள் சீரியல் – 4.98 டிஆர்பி
- அழகே அழகு சீரியல் – 4. 68 டிஆர்பி
இவ்வாறு, ஏப்ரல் 2வது வாரத்தில் இந்த ஐந்து சீரியல்களை டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இந்த சீரியலில் அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற 3 சீரியல்களை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று, டாப் 3 இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.