AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rachitha Mahalakshmi: அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் – மௌனம் உடைத்த ரச்சிதா!

Fire Movie Controversy: தமிழ் மக்கள் மத்தில் சீரியல் நடிகையாக நுழைந்து, தற்போது சினிமாவில் நாயகியாக நடித்துவருபவர்தான் ரச்சிதா. இவர் சமீபத்தில் பேசியிருந்த நேர்காணல் ஒன்றில், ஃபயர் படத்தில் நடித்ததில் நிறைய ட்ரோல் மற்றும் விமர்சனங்களை பார்த்து பயங்கரமாக அழுததாக தெரிவித்துள்ளார்.

Rachitha Mahalakshmi: அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் – மௌனம் உடைத்த ரச்சிதா!
ரச்சிதா மகாலட்சுமிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Apr 2026 20:28 PM IST

சின்னத்திரை சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரச்சிதா மகாலெட்சுமி (Rachitha Mahalakshmi). இவர் தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சீரியல்களில் (Vijay TV serials) நடித்து மக்கள் மத்தியில் நெருக்கமானவர். இவர் கடந்த 2011 – 2012ம் ஆண்டு வரையில் வெளியான “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலின் மூலம் தமிழில் சீரியல் நடிகையாக நுழைந்தார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து சன் டிவியில் வெளியான இளவரசி என்ற நாடகத்திலும் நடித்திருந்தார். அந்த வகையில் இவருக்கு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் மீனாட்சியாக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த சீரியல்தான் சரவணன் மீனாட்சி (Saravanan Meenatchi). இந்த சீரியலின் சீசன் 2வில் கவினுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார், பின் சரவணன் மீனாட்சி சீசன் 3ல் ரியோ ராஜுடன் இணைந்து நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து சீரியல்களில் நடித்துவந்த இவர், சினிமாவிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார்.

அந்த விதத்தில் 2015ம் ஆண்டில் வெளியான உப்பு கருவாடு என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இடத்தியடுத்து இவர் லீட் கதாநாயகியாக நடித்த படம்தான் எஸ்க்ஸ்ட்ரீம். அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான ஃபயர் என்ற படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பெரும் விமர்சனங்களை பெற்றிருந்தார். அந்த விதத்தில் தற்போது அந்த விமர்சனங்கள் குறித்து மனம் திரண்டு பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பேமிலி ஆக்ஷன் கதையில்.. லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

ஃபயர் படத்தில் நடித்ததற்காக விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து மனம் திறந்த ரச்சிதா மகாலெட்சுமி:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரச்சிதா மகாலெட்சுமி பேசுகையில், “என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் நான் நடித்த ஃபயர் படத்தினால் அதிகம் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல் செய்யப்பட்டேன். அந்த படத்தில் நடித்ததற்கு என்னை நினைத்தே நான் மிகவும் பயங்கரமாக அழுதேன். ஒரு குழந்தையை போல எனது வீட்டு பூஜை அறையில் இருந்து அழுதேன். அப்போது நான் ரொம்பவே உடைந்து அழுதேன்.

இதையும் படிங்க: அந்த ஒரு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைக்கிறேன் – செல்வராகவன் ஓபன் டாக்

அதன்பிறகு நான் நினைத்தேன், ரம்யா கிருஷ்ணன் அவர்களின் பழைய படத்தை பற்றி இப்போது , ஏன் நீங்க அப்போது அப்படி நடிசீங்கனு கேட்டாங்களா?, இல்லை. அதுபோலத்தான் நாமும் ஒரு நிலைக்கு வந்துவிட்டால், ஏன் இவ்வாறு நடிசீங்கனு கேட்கமாட்டாங்க. அதை நினைத்து எனது மனதை நான் தேற்றிக்கொண்டேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகை ரச்சிதா மகாலெட்சுமியின் போட்டோஷூட் பதிவு:

நடிகை ரச்சிதா மகாலெட்சுமி தற்போது சின்னத்திரையில் நடிப்பதை ஒப்பிடும்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். மேலும் இவர் தமிழில் மே நிகர், யு ஆர் நெக்ஸ்ட் போன்ற படங்களிலும் நடித்துவருகிறார். இதையடுத்து மேலும் சின்னத்திரையில் புது சீரியலிலும் இவர் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us