AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து பெண்களுக்குமா? அமைச்சர் ரமேஷ் கொடுத்த செம அப்டேட்!

Magalir Urimai Thogai : தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை.. அனைத்து பெண்களுக்குமா? அமைச்சர் ரமேஷ் கொடுத்த செம அப்டேட்!
மகளிர் உரிமை தொகை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Jul 2026 21:54 PM IST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் தனது தொகுதி மக்களுக்கான குறைதீர் முகாமை இன்று வியாழக்கிழமை ( ஜூலை 9- ஆம் தேதி) நடத்தினார். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அமைச்சர் ரமேஷ் பெற்றார். இதை தொடர்ந்து, அவர் பேசுகையில், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கோரிக்கை மனுவோடு வந்திருப்பவர்கள் அதனை கொடுப்பதற்காக காத்திருக்க வேண்டாம். தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்குவதை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளார். எனவே, அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைக்கும்போது, நிச்சயம் உங்களின் அனைத்து பெயர்களும் அந்த திட்டத்தில் இடம் பெறும்.

அனைத்து குடும்பத தலைவிகளின் பெயர் சேர்க்கப்படும்

இதில், தற்போது வரை உரிமை தொகை பெற்று வருவோரின் பெயர்கள் உள்பட அனைத்து குடும்ப தலைவிகளின் பெயரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும். எனவே, தற்போது மகளிர் உரிமை தொகை தொடர்பாக மனு அளிக்க காத்திருப்பவர்கள் இங்கு காத்திருக்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் மதிப்புமிகு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.. தவெக அரசு- முதல்வர் விஜய்க்கு எடப்பாடி நறுக் கேள்வி!

ரூ.2,500 மதிப்பு மிகு மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து வழங்கி வந்தார். இதனிடையே, சட்டமன்ற தேர்தலின் போது, இந்த தொகை ரூ.1,500- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. இதே போல, தமிழக வெற்றிக் கழகமும் ரூ.2.500 மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக தெரிவித்திருந்தது.

மகளிர் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி

அதன்படி, தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், இந்த உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்து வருகிறது. கடந்த 2 மாதங்கள் அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது. எப்போது, உயர்த்தப்பட்ட ரூ.2,500 தொகை வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அமைச்சர் ராஜ்மோகன் எத்தனை அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Follow Us