AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

Vijay TV TRP Rating Serials: தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி. இந்த வாரத்த்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் தீவில் முதலிடத்தில் உள்ள சீரியல் எது என பார்க்கலாம். விவரங்கள் இதோ.

விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
விஜய் டிவி தொடர்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Apr 2026 17:50 PM IST

ஒட்டுமொத்த சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியானாது வெறும் சீரியல் மட்டும் ஒளிபரப்பாமல், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பலவற்றை வெளியிட்டுவருகிறது. அந்த விதத்தில் சின்னத்திரை சீரியல்களில் (Smal Screens Serials) போட்டியாக இந்த விஜய் தொலைக்காட்சியுடன் சன் தொலைக்காட்சி மோதுவது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த விதத்தில் விஜய் தொலைக்காட்சி சீரியல்களை மக்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இந்த தொலைக்காட்சியில் எப்போதும் டாப் 5 இடங்களை (Top 5 TRP) சில முக்கியமான சீரியல்கள் பிடிப்பது வழக்கமே.

அந்த விதத்தில் விஜய் தொலைக்காட்சியில் இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த சீரியல் மற்றும் டாப் 5ல் எந்த தொலைக்காட்சி தொடர் இருக்கிறது என்பது குறித்து தெரியுமா?. இந்த வாரத்தில் விஜய் தொலைக்காட்சியில் 7.34 டிஆர்பி ரேட்டிங் பெற்று சிறகடிக்க ஆசை என்ற சீரியல் முதல் இடத்தில் உள்ளதாம். தற்போது இது குறித்த தகவல்களை ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது டீசர்

சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோஸ் வீடியோ பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இந்தவார டாப் 5 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருக்கும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள்:

இந்த வாரத்தில் விஜய் டிவிடியில் 7.34 புள்ளிகள் பெற்று சிறகடிக்க ஆசை சீரியல் 1ல் இடத்தில உள்ளது. 2வது இடத்தில அய்யனார் துணை சீரியல், மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2, நான்காவது இடத்தில் அழகே அழகு மற்றும் 5வது இடத்தில் சின்ன மருமகன் என்ற சீரியல் உள்ளது.

இதையும் படிங்க: மலையாள சினிமா வரலாற்றில் முதன்முறையாக… நேரடியாக தியேட்டரில் வெளியாகும் பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்

  • சிறகடிக்க ஆசை சீரியல் – 7.34
  • அய்யனார் துணை சீரியல் – 7.14
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் – 6. 36
  •  அழகே அழகு சீரியல் – 5.06
  •  சின்ன மருமகள் சீரியல் – 4.79

இவ்வாறு இந்த வாரத்தில் விஜய் தொலைக்காட்சியில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில், இந்த சீரியல்கள் இடம்பெற்றுள்ளது. அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்திலிருந்த நிலையில், இந்த வாரத்தில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த விதத்தில் விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை மற்றும் சிறகடிக்க ஆசை போன்ற இரு சீரியல்களுக்கு இடையேதான டிஆர்பி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரத்தில் மீண்டும் அய்யனார் துணை சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us