டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல்.. அய்யனார் துணை சீரியல் எந்த இடத்தில் தெரியுமா?
Tamil TV Serials TRP: தமிழில் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கை வைத்துதான் எந்த சீரியல் முதல் இடத்தில் இருக்கிறது, எது மக்களுக்கு நெருக்கமான சீரியலாக இருக்கிறது என்பது தெரியவரும். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு வரவேற்கப்படுகிறதோ, அதற்கும் மேலாக மக்கள் மத்தியில் டிவி சீரியல் (TV Serials) மிகவும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதிலும் தமிழில் குறிப்பாக சன் டிவி (Sun TV), விஜய் டிவி (Vijay TV), மற்றும் ஜீ தமிழ் (Zee tamil) தொலைக்காட்சி இந்த மூன்று டிவி சேனலும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது. இந்த 3 சேனல்கள்தான் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் (TRP Rating) போட்டிபோட்டு வருகின்றன. டிஆர்பி என்பது ஒரு சீரியல் மக்களாக எவ்வளவு விரும்பப்படுகிறது, எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதின் கணக்கு போல. தமிழில் வெளியாகிவரும் தொலைக்காட்சி தொடர்கள் எப்போதும் நிலையான டிஆர்பி ரேடிங்கை பெறுவதில்லை.
விஜய் டிவி, மற்றும் சன் தொலைக்காட்சி என இந்த இரு சேனல்களுக்கு தான் போட்டி அதிகம் என்று கூறலாம். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பும் டாப் 5 சீரியல்கள் (Top 5 Serials) என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!
தமிழில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் லிஸ்ட்:
சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும்போல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மூன்று முடிச்சி சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அதே சன் டிவியில் ஒளிபரபகைவரும் சிங்கப் பெண்ணே என்ற சீரியல் பிடித்துள்ளது. 3வது இடத்தில் கேபிரியலா நடிக்கும் மருமகள் தொடரும், 4வது இடத்தில் சைத்ரா ரெட்டி நடிக்கும் கயல் தொடரும் இருக்கிறது.
இதையும் படிங்க: ஹேப்பி ராஜ் படம் சாதாரண ஃபன் படம் மாதிரி இருக்காது.. இதில் நிறைய மீனிங் இருக்கு – ஜி.வி. பிரகாஷ் குமார் ஓபன் டாக்!
இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் அய்யனார் துணை சீரியல் 5வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 4 இடத்தை சன் தொலைக்காட்சி தொடர்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
டிஆர்பி ரேட்டிங் சீரியல் லிஸ்ட் :
- மூன்று முடிச்சி சீரியல் – 9.98
- சிங்கப்பெண்ணே சீரியல் – 8.27
- மருமகள் – 7.73
- கயல் 7.60
- அய்யனார் துணை சீரியல் – 7.41
என தொடர்ந்து டாப் 5 இடத்திற்காக சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே கடுமையான போட்டிகள் நிலவுகிறது. வார வாரம் டிஆர்பி ரேட்டிங் மாறிவரும் நிலையில், விரைவில் விஜய் தொலைக்காட்சியும் டாப் 1 அல்லது 2வது இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அய்யனார் துணை சீரியல் ப்ரோமோ குறித்த பதிவு:
View this post on Instagram
தற்போது விஜய் தொலைக்காட்சியில் டாப் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலானது விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை மற்றும் சின்ன மருமகள் போன்ற தொடர்களும் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது