AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Youth: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!

Silambarasan Praised Youth Movie: சிலம்பரசனின் நடிப்பில் அரசன் திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. மேலும் சமீபத்தில் யூத் படமானது மக்கள் மத்தியில் பிரபலமாகி பேசப்பட்டுவரும் நிலையில், அந்த படத்தை பார்த்த சிலம்பரசன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல்.

Youth: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!
யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Mar 2026 11:40 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க குழந்தை நட்சத்திரமாக இருந்து, தற்போது லீட் கதாநாயகனாக திரைப்படங்களில் கலக்கிவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 48 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இதில் கமல்ஹாசன் லீட் நாயகனாக நடிக்க, அவருடன் சிலம்பரசனும் மிக முக்கிய நாயகனாக இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரசிகர்களிடையே அது பூர்த்தி செய்யவில்லை என்று கூறலாம். அந்த வகையில் இதையடுத்து உடனடியாக இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) என்ற படத்தில் நடித்துவருகிறார். இது தனுஷின் (Dhanush) வட சென்னை (Vada Chennai) படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இதில் சிலம்பரசனுடன் விஜய் சேதுபதி, யோகலட்சுமி, டீஜெய் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். அந்த வகையில் சிலம்பரசன் தான் கென் கருணாஸின் (Ken Karunaas) யூத் (Youth) பட ட்ரெய்லரை வெளியிட்டிருந்தார். இப்படம் கடந்த 2026 மார்ச் 19ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தை பார்த்த சிலம்பரசன் வாழ்த்தி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாதான் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறார் – புகழ்ந்து பேசிய சிரஞ்சீவி!

யூத் திரைப்படம் மற்றும் படக்குழுவை வாழ்த்தி சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் சிலம்பரசன் தெரிவித்தது என்னவென்றால், யூத் படமானது ஒரு புத்துணர்ச்சி, துடிப்பு மற்றும் இதயம் நிறைந்த அருமையான படம். இப்படம் இன்றைய தலைமுறையினருடன் உண்மையிலே ஒத்துபோகின்ற ஒரு கதை. கென் கருணாஸின் நடிப்பு அருமையாக இருக்கிறது. இவ்வளவு சிரயவயதிலே படத்தை இயக்கி நடித்த விஷயம், படத்தை அவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டுவந்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உண்மையிலே பிரமாதம்.மேலும் சுராஜ் சார், தேவதர்ஷினி மேம் உடனான காட்சிகள் உண்மையிலே பிடித்திருந்தது. மேலும் இப்படத்தின் நடிகைகள் படத்திற்கு சிறந்த ஆற்றலை கொடுத்துள்ளனர். மேலும் ஜி.வி.பிரகாஷின் இசை, ஒவ்வொரு தருணத்தையும் மெருகேற்றுகிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கென் கருணாஸின் யூத் திரைப்படம் :

யூத் படத்தை கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ளார். இதை சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷிமா அனில்குமார், மீனாட்சி, பிரியன்ஷியாதவ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். பள்ளிப்பருவ காதல் மற்றும் எமோஷனல் கதையை மையமாக கொண்டு இயக்கபட்டிருந்த நிலையில், 2026 மார்ச் 19ம் தேதிமுதல் வெளியாகியுள்ளது. தற்போது திரையரங்குகளில் இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us